Skip to main content

இன்டஸ்ட்ரியல் காரிடராகிறது நெல்லை-தூத்துக்குடி ரோடு

திருநெல்வேலியில் இருந்து பிரிந்து சென்ற தூத்துக்குடி இன்று தொழில் வளர்ச்சியில் கோவையோடு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி-மதுரை சாலையை இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்ற அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

திட்டத்தில் திடீர் மாற்றம்.?

இந்நிலையில் அதற்கு முன்னதாக திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை முதலில் இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்றப்படும் என்ற தடாலடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதை ஒட்டி மதுரையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய தொழில்துறை அமைச்சர் M.C சம்பத் சென்னை-கன்னியாகுமரி தொழில் வளர்ச்சி பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லை-தூத்துக்குடி காரிடர் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொழில்துறைக்கு ஏற்ற பகுதி:

அவ்விழாவில் பேசிய அதிகாரிகளும் தென்மாவட்டங்களின் சிறப்பம்சங்களை வெகுவாக விதந்தோதி உள்ளனர். தமிழ்நாட்டில் மின் வசதி தங்குதடையின்றி கிடைக்கும் பகுதி தென்மாவட்டங்கள் தான் என்று பேசியுள்ளனர். துறைமுகம்,ரயில் பாதை,விமான நிலையம் என சாதகமான பல அம்சங்கள் இங்கு இருப்பதை சுட்டிக் காட்டி பேசியுள்ளனர்.

மாற்றம் காணுமா நம் மண்.?

நம்மூரில் ஏற்கனவே தொடங்கப்பட்ட கங்கைகொண்டான்,நாங்குநேரி தொழில் திட்டங்கள் காத்தாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசின் இப்புதிய அறிவிப்பு உத்வேகத்தை ஏற்ப்படுத்த வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சியை தவிர நம் நெல்லைக்கு குறையொன்றுமில்லை. கூடி சீக்கிரம் அந்த குறையும் நீங்கும் என எதிர்பார்ப்போம்.

Comments

  1. Must improve little more ,no entertainment ,only cinema theatres , very much boring ,on Sundays we used to sit inside houses only !!! IT companies must come ,Malls ,parks also must come ,clean the roads ,no street lights ,near reliance markets ,railway junctions no street lights are there !!Full of darkness ,no brightness for nellai city !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நெல்லையில் அமையுமா ஐஐடி , என்ஐடி.?

    தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமை நம் திருநெல்வேலிக்கு உண்டு. நெல்லையின் பாளையங்கோட்டை கல்லூரி,பள்ளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நகரம்.  தென்தமிழகம் இன்று அடைந்திருக்கும் கல்வி வளர்ச்சியில் பாளையங்கோட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் பட்டதாரிகள் இன்று உலகம் முழுதும் செல்வாக்கு மிக்க இடத்தில் அமர்ந்துள்ளனர்.  சில ஆண்டுகள் முன்பு வரை அறவே தொழில் வளர்ச்சி இல்லாத நிலை நெல்லையில் தற்போது மாறிவருகிறது. அருகே தூத்துக்குடி மிதமான தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. நெல்லையிலும் தொழில் துறை அரும்பத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு,மனிதவளம் உள்ளிட்டவையும் நம்மிடம் சிறந்த வகையில் உள்ளது. தேவை ஐஐடி, என்ஐடி:      கல்வி ரீதியில் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பல திருநெல்வேலியில் அமைந்திருந்தாலும் இந்திய அரசின் கல்வி நிறுவனம் நெல்லையில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளூரில் தரம் வாய்ந்த கல்வி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதுவும் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரில் ஒரு இந்திய அரசு கல்வி நிறுவனமும் இல்லாதது

நெல்லையில் ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் கோவில்.!

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பலருக்கு நண்பராக, கடவுளாக விளங்குபவர் விநாயகர். இன்னும் சிங்கிளாக விளங்குவது அவரது தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட விநாயகருக்கு நம் நெல்லையில்  ராஜாகோபுரத்துடன் கூடிய தனிக் கோவில் கம்பீரமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா.? தாமிரபரணி நதிக் கரையோரத்தில் மணிமூர்த்தீஸ்வரம் என்னும் இடத்தில் அழகிய கோவில் ஆனைமுகனுக்கு அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு என்று பிரத்யேகமாக பல கோவில்கள் இருந்தாலும், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையார் கோவில் என்ற பெருமை நம் நெல்லை. மணிமூர்த்தீஸ்வரம் கோவிலுக்கே உண்டு. பிள்ளையார்பட்டியில் கூட துணைக் கடவுளாக மட்டுமே அருள்பாலிக்கும் விநாயகர் நம் நெல்லையில் மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நம்ம ஊரு விநாயகர் கமிட்டெட் ஆன விநாயகராக இங்கு வீற்றிருக்கிறார். ஆம், விக்னேஷ்வரி என்ற பெண் தெய்வத்தோடு  இங்கு அருள்பாளிக்கிறார் நம்மூரு உச்சிஷ்ட்ட விநாயகர். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், விழாக் கோலம் பூண்டுள்ளது இக்கோவில். வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து இக்கோவிலுக்கு சாலை வசதி உண்டு.! விநாயகர் சதுர்த்த

உலக நாகரிகத்தின் தொட்டில்: நெல்லை ஆதிச்சநல்லூர்

நாம் படிக்கின்ற காலத்தில் இந்தியாவின் மிகப்பழமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றே நம் வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே நம் நெல்லை தாமிரபரணி கரையோரத்தில் மிகச் செழிப்பான நாகரிகம் இருந்துள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகம். நம் தாமிரபரணி கரையோரப்பகுதி இப்போது போலவே அந்த காலங்களிலும் மிகச் செழிப்பாக இருந்துள்ளது. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை உயர்ந்த நாகரீகத்தை பின்பற்றி நம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆதியில் தோன்றிய ஆதிச்சநல்லூர்: நம் நெல்லையில் இருந்து பதினெட்டே கி.மீ தொலைவில் தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி இங்கே நடந்து கொண்டிருந்த சமயத்தில் அலெக்ஸாண்டர் என்ற தொல்பொருள் ஆய்வாளர் அகழாய்வை மேற்கொண்டார். அதில் அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.  ஆம், உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு ஒன்று அங்கே இருப்பதைக் கண்டு அசந்துபோனார். சுமார் 110 ஏக்கரில் அது அமைந்திருக்கிறது. இடுகாடே இத்தனை பெரியதாக இருந்தால் அங்கே மிகப் பெரிய நகரம் ஒன்றும் இருந்திருக்கும் என அறிவித்தார் அந்த