தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் கடைகோடி ரயில் நிலையமாக இருக்கிறது நம் திருநெல்வேலி ஜங்ஷன். நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு அந்த புறம் திருவனந்தபுரம் கோட்டம் ஆரம்பமாகிவிடுகிறது.
நெல்லையே எல்லை!
இதனால் வட மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நம் நெல்லையோடு நின்றுவிடும். அதேப் போல கேரளா மார்க்கமாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நாகர்கோவிலோடு நின்றுவிடும்.
மதுரைக் கோட்டத்தில் கடைசியாக இருப்பதால் நம் நெல்லையிலிருந்தே பெரும்பாலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நம் நெல்லையர்களுக்கு முன்பதிவற்ற பெட்டிகளில் இடவசதியும் முன்பதிவும் தாராளமாக கிடைத்து வந்தது.
பறிபோகும் நெல்லையர்களின் உரிமை:
ஆனால் நமது இந்த செளகரியத்திற்கு உலை வைக்கும் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. நம் நெல்லையிலிருந்து இயங்கிவந்த பல ரயில்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது.
நம் உரிமையை பறிக்கும் குமரி!
நெல்லை - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஏற்கனவே திருவந்திரம் வரை நீட்டிக்கப்பட்டு விட்டது.
அடுத்ததாக தற்போது நெல்லை-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய சென்னை ரயிலும் நாகர்கோவிலில் இருந்தே புறப்படுகிறது.
இதனால் ரயிலில் இடம் கிடைக்காமல் நம் நெல்லை மக்கள் அவதிப்படுகிறார்கள்.
பல புறக்கணிப்புகளை கடந்து தான் நம் நெல்லைக்கு ரயில்கள் கிடைக்கின்றன. அதையும் இப்படி பறித்தால் நாம் என்ன செய்வது?
நம்மிடம் இருந்து சென்னை ரயில்களை பறித்து குமரிக்கு விடும் ரயில்வே நிர்வாகம் கேரள ரயில்களை நம் நெல்லை வரை நீட்டிக்க முன்வராதது சந்தேகத்தை கூட்டுகிறது.
போகிற போக்கை பார்த்தால் நமது நெல்லை எக்ஸ்பிரசையும் நம்மிடமிருந்து பறித்து விடுவார்கள் போல....!

Comments
Post a Comment