கடந்த 25 ஆண்டுகளாக நம் நெல்லை வசம் இருந்த பெருமையை நாகர்கோவில் சமீபத்தில் தட்டிப்பறித்துள்ளது.
கடைகோடி மாநகராட்சி:
நகராட்சியாக இருந்த நம் நெல்லை 1994 ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. அப்போது தமிழ்நாட்டின் கடைகோடி மாநகராட்சி என்ற பெருமை நம் நெல்லைக்கு கிடைத்தது. சுமார் 25 ஆண்டுகளாக அந்த பெருமையை தன் வசம் திருநெல்வேலி வைத்திருந்தது.
கைமாறியது:
இந்நிலையில் சமீபத்தில் நம் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டின் கடைகோடி மாநகரமாக அது மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடைகோடி மாநகரமாக அது தற்போது மாறியுள்ளது.(இதற்கு முன்பு திருவனந்தபுரம்).
நெல்லைக்கு பிளஸ் தான்.!
எனினும் நாகர்கோவில் மாநகராட்சியாகிருப்பதால் நம் நெல்லை பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.
நெல்லை,தூத்துக்குடி,நாகர்கோவில் என மாநகரங்களின் பிராந்தியமாக நம் நெல்லை மண்டலம் உருவாகியுள்ளது. எந்த விதமான பெரிய தொழில்,உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நம் நெல்லை பிராந்தியம் இந்த இடத்திற்கு வந்துள்ளதே பெரும் சாதனைதான்.!
Comments
Post a Comment