நம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான பெரிய நகரங்கள் பத்துக்கும் குறைவு தான். அதில் முதலிடம் பிடிப்பது சிங்காரச் சென்னை. நம் மாநிலத்தின் தலைநகரகமாக இருப்பதால் தமிழர்களின் மனம் கவர்ந்த நகரமாக அது இருக்கிறது. சென்னையை மையப்படுத்தி பல மீம்ஸ் பக்கங்கள் முகநூலில் உண்டு. இவற்றிற்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்.
சென்னைக்கு அடுத்து எது?
மக்கள் தொகையில் சென்னைக்கு அடுத்து கோவையும்,மதுரையும்,திருச்சியும் இருக்கின்றன. இதில் மதுரையின் மீம்ஸ் பக்கங்கள் தமிழகம் முழுவதும் பிரபலம். அது மதுரையைப் பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் குறித்தும் பேசுகிறது.
அதைவிட்டால், கோவை திருச்சி பற்றிய முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றன.
அசத்தும் நெல்லை அட்மின்கள்:
ஆனால் மேற்கண்ட ஊர்களின் மீம்ஸ் பக்கங்களை போல் அல்லாமல் முழுக்க முழுக்க சொந்த ஊர் பெருமையை பேசி அசால்ட்டாக ஆயிரம் லைக்குகளை அள்ளுகிறது நம்மூர் முகநூல் பக்கங்கள்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் நம்மூர் மீம்ஸ் கிரியேட்டர்களை தற்பெருமை பேசுபவர்கள், தமிழர்களை பிளவுபடுத்துவர்கள் என்றெல்லாம் வசைமாரி பொழிகின்றனர்.
உண்மை இது தான்!
திருநெல்வேலி மக்கள் தங்களது பெருமைகளை உரக்கப் பேசுவது தற்பெருமையால் அல்ல, இவ்வளவு பெருமைகளை நாங்கள் கொண்டிருக்கிறோம். இனிமேலாவாது எங்களை கவனியுங்கள், எங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுங்கள் என்பதற்கு தான்.
வழிகாட்டும் கோவை:
ஒருகாலத்தில் இன்று நம் நெல்லை மண்டலம் இருப்பதைப் போலவே தான் கோவையும் இருந்தது. முழுக்க விவசாயப் பகுதிகள், செழிக்கும் இயற்கை என தொழில் வளர்ச்சி அறவே இல்லாத பகுதியாக அது இருந்தது. ஆனால் கொங்கு மண்டலம் என்ற ஒற்றை புள்ளியில் ஒன்றுபட்டதால் இன்று சென்னைக்கு நிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மக்கள்.
ஆனால் திருநெல்வேலி மக்களோ சாதி என்ற பிற்போக்குத்தனத்தால் பிளவுபட்டு கிடக்கிறோம்.
இதிலிருந்து விடுபடும் பொருட்டே திருநெல்வேலியன் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைய நாங்கள் முயற்சிக்கிறோம்.
திருநெல்வேலி தமிழன்டா.!
எனவே நாங்கள் தற்பெருமை பேசுபவர்களோ, தமிழர்களை பிரிப்பவர்களோ அல்ல..!
இப்படிக்கு
திருநெல்வேலித் தமிழன்.
fan of tirunelveli page அட்மின்களும் சரி கமெண்ட் போடறவங்களும் சரி மோடியை எதிர்க்க வேண்டுமென்றால் ஓரணியில் நிற்கிறார்கள்.
ReplyDelete