Skip to main content

நெல்லையின் மறக்க முடியாத ஆட்சியர்.!


   
    நாள் தோறும் நெல்லைக்குள் சீறிப்பாயும் நவீன ரக மாநகரப் பேருந்துகளின் பெயர் பலகைகள் சுத்த தமிழில் எழுதப் பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா.?

ஜங்ஷனை - நெல்லை சந்திப்பு என்றும்,
ஐகிரவுண்டை - பாளை மேட்டுதிடல் என்றும்
டவுணை - நெல்லை நகரம்
என்றும் எழுத வைத்த அந்த நபர் யார் தெரியுமா.?

1998 முதல் 2001 வரை நெல்லையில் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. தனவேல்  I.A.S தான்.

தனித்துவமான திருநெல்வேலி:

தமிழ்நாடு அரசாங்க வட்டாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்று ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்து வகையான நிலப்பரப்பு, பலதரப்பட்ட மக்கள், விநோதமான பிரச்னைகள் என்று பல அம்சங்கள் நம் மாவட்டத்திற்கே உரித்தான விஷயங்கள்.

எனவே திருநெல்வேலிக்கு திறமையான அதிகாரிகளே ஆட்சியர்களாக நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் தமிழ்நாடு அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கும் சென்றுவிடுவார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக பல அதிகாரிகள் உள்ளனர்.

திருநெல்வேலியை திருத்தியவர்:

அவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் நெல்லை ஆட்சியர் திரு. தனவேல். அவரின் பணிகாலத்தில் பல முன்னெடுப்புகள் நம் நெல்லையில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

2000-ம் ஆண்டு இவர் கொண்டுவந்த "நெல்லையை பசுமையாக்கும் திட்டத்தின்" கீழ் நெல்லை மாநகரில் நூற்றுக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டு பரமாரிக்கப்பட்டன.

நெல்லையை அழகுபடுத்தும் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி நெல்லை சாலைகளில் அலங்கார ரவுண்டானாக்களையும் அமைத்திருக்கிறார்.

மிக முக்கியமாக திலி-ஜங்ஷன், ஹைகிரவுண்ட், நெல்லை டவுண் என்று பெயர் போட்டு இயங்கிய மாநகர பேருந்துகளை திருத்தி நெல்லை சந்திப்பு பாளை. மேட்டுதிடல் என தனித் தமிழாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இப்படி அவர் பதித்த தடங்கள் நம்  நெல்லையின் பல இடங்களில் இன்று அழகாக தெரிந்து கொண்டிருக்கின்றன.

தற்போது இவரை தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...