67 வயதில் அரசியலுக்கு வந்திருக்கும் ரஜினி தனது அரசியல் செயல்பாடுகளை வேகப்படுத்தியிருக்கிறார். நேற்று சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் M.G.R சிலையை திறந்து வைத்துள்ளார். அங்குகூடிய கூட்டத்தைப் பார்த்து வியந்த ரஜினி தனக்கு மனதில் பட்ட அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அனல் பறந்த பேச்சு:
அரசியலில் குதித்தது முதல் கடந்த 2 மாதங்களாக மேலோட்டமாக கருத்து தெரிவித்து வந்த ரஜினி நேற்று பொங்கியெழுந்திருக்கிறார். தன்னை நோக்கி எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு வெளிப்படையாக ஆமாம் இல்லை என்று பதிலளித்துள்ளார் ரஜினி. மேலும் இரு பெரும் திராவிட ஆளுமைகளான ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை புகழ்ந்து தள்ளியுள்ளார் ரஜினி. அரசியலை கருணாநிதி,சோ முதலானவர்களலிடமிருந்து கற்றுக்கொண்டதாக ரஜினி கூறியுள்ளார். இதனால் அவர் எப்படி தூய்மையான அரசியல் நடத்துவார்? என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வியை எழுப்புகின்றனர். தமிழன் வளரவேண்டுமானால் தமிழை விட ஆங்கிலத்திலேயே அதிகம் பேச வேண்டும் என ரஜினி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மராட்டியத்தில் பிறந்தவருக்கு தமிழ் மொழி மீது பற்று இல்லாததையே இது காட்டுகிறது என தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் நேற்றைய விழாவில் எம்.ஜி.ஆரை வாயார புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக வை ரஜினி கபளீகரம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படி இருந்தாலும் நேற்று ரஜினி பேசிய பேச்சு பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததிருப்பது உண்மை. ரஜினி பேசும் பேச்சுகள் அனைத்தும் ஓட்டுகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
Comments
Post a Comment