நெல்லை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அகத்திய மலை ஐ.நாவின் அதிதீவிர உயிர் கோள பாதுகாப்பு பெட்டகங்களுள் (Biosphere Reserve) ஒன்றாகும். அதாவது, உலகமே அழிந்தாலும் இங்குள்ள தாவரங்களையும், உயிரினங்களையும் கொண்டு புது உலகை படைத்து விடலாம். அந்த அளவிற்கு தனித்துவமான தாவரங்களையும் அரிய வகை உயிரினங்களையும் இந்த மலை பெற்றிருக்கிறது.
பொதிகை மலை:
இந்த பகுதியை பொதிகை மலை என்றும் அழைக்கின்றனர். இங்கு தான் இந்து மத ரிஷிகளில் ஒருவரான அகத்தியர் வாழ்ந்துள்ளார். இங்கு தான் தமிழ் மொழியும் தோன்றியதாக கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள அகத்தியர் கூடம் என்ற சிகரம் 6,129 அடி உயரமானது. இந்த சிகரம் தென்னிந்தியாவின் 2வது மிக உயரமான சிகரமாகும். இந்த மலைப்பகுதியில் தான் தமிழகதத்தின் முதல் புலிகள் சரணாலயமான முன்டந்துறை சரணாலயம். மிக முக்கியமாக இந்த அடர்ந்த வனப் பகுதியிலிருந்து தான் தமிழகத்தின் ஒரே ஜீவநதியான நம் தாமிரபரணியும் பிறக்கிறாள். அதே போல கேரளாவின் முக்கிய நதியான நெய்யாறும் இங்கிருந்து தான் உற்பத்தி ஆகிறது. ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டிருப்பதால் இப்பகுதி அளவில்லா செழிப்போடு திகழ்கிறது.
Comments
Post a Comment