தூத்துக்குடி அன்று
மீனவ கிராமமாக விளங்கிய தூத்துக்குடி பண்டைய பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய கொற்கையின் வடக்கே அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் தூத்துக்குடி மெல்ல மெல்ல வளரத்துவங்கியது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி இருந்த போது, ஆங்கிலேயர்கள் தூத்துக்குடியில் அடிப்படை வசதிகளை பெருக்க பெரும் நடவடிக்கைகளை எடுத்தனர். நெல்லை வழியாக கொல்லத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்து துவங்கியதும் தூத்துக்குடியின் வளர்ச்சி அதிகரித்தது.
பின்னர் சுதந்திர போராட்ட காலத்தில் பல வீரர்கள் இந்த ஊரில் இருந்தே ஆங்கிலேயருக்கு எதிராக போர் முழக்கமிட்டனர். வ.உ.சி தூத்துக்குடியில் இருந்து சுதேசி கப்பல் விட்டு போராடினார்.
தூத்துக்குடி இன்று:
அன்றைய தூத்துக்குடியோடு இன்றைய தூத்துக்குடியை ஒப்பிடவே முடியாது. ஏனென்றால் இன்றைய தூத்துக்குடி பல பிராம்மாண்ட கம்பெனிகளால் அபாரமாக வளர்ந்து நிற்கிறது. ஸ்பிக் தொடங்கி பல நிறுவனங்கள் தூத்துக்குடியை வாழவைக்கின்றன.
ஆனால் அதே நிறுவனங்கள் தான் தூத்துக்குடிக்கு பாதமாகவும் அமைந்துள்ளன. அவைகள் வெளியிடும் புகைகளால் திணறுகிறது முத்துநகரம்.
இருந்தும் அம்மக்கள் ஓயாமல் உழைத்து அந்நகரை வளர்க்கின்றனர். தாகத்திற்கான தண்ணீரை தாமிரபரணி தருகிறது. சுவாசிக்க காற்றை பொதிகை தருகிறது. உழைப்பால் உயர்கிறது தூத்துக்குடி. ஒரு நாள் நெல்லையையும் விஞ்சி வளர்ந்து நின்றாலும் ஆச்சரியமில்லை.!
வளரட்டும் ..!
ஏன்னா அது நம்ம வீட்டு பிள்ளை தானல.!
இருந்தும் அம்மக்கள் ஓயாமல் உழைத்து அந்நகரை வளர்க்கின்றனர். தாகத்திற்கான தண்ணீரை தாமிரபரணி தருகிறது. சுவாசிக்க காற்றை பொதிகை தருகிறது. உழைப்பால் உயர்கிறது தூத்துக்குடி. ஒரு நாள் நெல்லையையும் விஞ்சி வளர்ந்து நின்றாலும் ஆச்சரியமில்லை.!
வளரட்டும் ..!
ஏன்னா அது நம்ம வீட்டு பிள்ளை தானல.!
Comments
Post a Comment