பருவ மழைக்காலங்களின் போது முதலில் காற்றழுத்தங்கள் உருவாகி பின்னர் மண்டலமாக உருவெடுத்து அதன்பின் புயலாக மாறுகின்றது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் இந்த புயல்கள் பெரும்பாலும் வங்கக் கடலில் உருவாகி வடதமிழகம்-ஆந்திரா-ஒடிசா முதலிய கடலோரங்களில் கரையை கடக்கும். ஆனால் கடந்த ஆண்டு உருவான ஒக்கி புயல் இவற்றுக்கு முற்றிலும் மாறாக தெற்கு குமரிக்கடலில் உருவாகி தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை,குமரியை புரட்டிப் போட்டது.
இது வழக்கத்திற்கு மாறாக நடந்த வானிலை நிகழ்வாக கருதப்படுகிறது.
அதே போல இப்போதும் மார்ச் மாதத்தில் குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இதனால், நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுவும் வழக்கத்திற்கு மாறாகவே நிகழ்ந்துள்ளது. வானிலை அதிகாரிகளின் கூற்றுப்படி சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மார்ச் மாதத்தில் இப்படி கனமழை பெய்கிறதாம். மேலும், கடந்த ஆண்டுகளில் உருவான காற்றழுத்ததாழ்வு மண்டலங்களில் அதிமானவை குமரி கடல் பகுதியில் தான் உருவாகியுள்ளன. இது புது விதமான வானிலை மாறுபாடாக கருதப்படுகிறது. இதனால் புயல்கள் தங்களின் பாதையை திருநெல்வேலி குமரியை நோக்கி திருப்புகிறதா என்ற சந்தேகமும் பயமும் மக்களிடம் எழுந்துள்ளது. அவ்வாறு நடந்தால் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் நிலையும் எதிர்காலத்தில் ஏற்படும்..!
Comments
Post a Comment