நெகிழி இல்லா நெல்லை:
நம் நெல்லையை பொறுத்தவரை நெகிழிப் பயன்பாடு தாமிரபரணிக்கு உலை வைக்கும் அளவிற்கு சென்றது உண்மை. இருந்தும் நம் மாநகராட்சியின் சிறப்பான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் மக்காத அக்குப்பைகள் தனியே சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
அதிரடி அகற்றம்:
நம் நெல்லையில் பெரும் வணிக நிறுவனங்கள் தொடங்கி பழஜீஸ் கடை வரை நெகிழி நீக்கமற நிறைந்திருக்கும்.
ஆனால் தற்போது அமலுக்கு வந்துள்ள தடையால் அந்த நிலை முடிவுக்கு வருகிறது. பல்வேறு கடைகளில் நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அந்த காலத்திற்கு மாறிய கடைகள்.
நம் நெல்லையில் மீண்டும் பாரம்பரிய ஓலைப் பெட்டிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. ஜங்ஷனின் முக்கிய கடைகள் பலவும் அல்வாவை ஓலைப் பெட்டிக்குள் பொதிந்து தருகிறனர். இதற்காக தனியே கட்டணம் எதையும் அவர்கள் வாங்குவதில்லை.
மீண்டும் மஞ்சப்பை:
இந்நிலையில் நம் நெல்லை மக்கள் மீண்டும் மஞ்சப்பைகளை எடுத்துக் கொண்டு வீதியில் வலம் வர ஆரம்பித்துள்ளனர்.
நம் மக்களின் அமோக ஆதரவு இருப்பதால் விரைவில் நெகிழி இல்லா நெல்லை உருவாகும் என நம்பலாம்.
Comments
Post a Comment