தனது அயராத உழைப்பாலும்,ஆவேச உரைவீச்சுகளாலும் உலகின் முதல் கம்யூனிச அரசை ரஷ்ய மண்ணில் நிறுவியவர் புரட்சியாளர் லெனின்.
அவரின் செல்வாக்கு ரஷ்யாவை தாண்டியும் பரவியிருந்தது. அவரது சிலைகள் இந்தியாவின் பல இடங்களில் நிறுவப்பட்டது.
திரிபுராவில் வீழ்ந்த சிலை.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளா,மேற்குவங்கம்,திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதிக வலுவோடு இருக்கின்றனர். இதில் கேரளம் தவிர்த்த இரு மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியை இழந்தது. கடந்த ஆண்டில் திரிபுராவில் பாஜகவிடம் ஆட்சியை அக்கட்சி பறிகொடுத்தது. அதன்பின்னர் அங்கு நடந்த அரசியல் வன்முறையில் பல லெனின் சிலைகள் தகர்க்கப்பட்டன.
நெல்லையில் எழுந்தார் லெனின்.
இந்தியாவின் வடகிழக்கு முனையில் வீழ்த்தப்பட்ட லெனினின் சிலை தற்போது தென்கோடி முனையில் எழுப்பப்பட்டுள்ளது. திருநெல்வேலி மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் 4 இலட்ச ரூபாய் மதிப்பில் 12 அடி உயரத்தில் துடிப்புள்ள சிலையாக அச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
நாடு தழுவிய செய்தி.
திரிபுராவில் வீழ்த்தப்பட்ட லெனின் சிலை திருநெல்வேலியில் எழுப்பப்பட்டது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மார்க்ஸிட் கட்சியின் தேசிய செயலாளர் இந்த சிலையை திறந்து வைத்திருப்பதே அதற்கு சாட்சி. இந்த நிகழ்வின் மூலம் நம் நெல்லையின் அரசியல் முக்கியத்துவம் மீண்டும் ஒரு முறை நாடு தழுவிய அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Idu theva iladha post.... Try to avoid political post
ReplyDelete