ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவின் தலைமை எந்த அளவிற்கு ஆட்டம் கண்டதோ அதே அளவிற்கு நெல்லை அதிமுகவும் கடும் சரிவுகளை சந்தித்தது. இந்த சிக்கலான சூழலில் நெல்லை வருகிறார் முதல்வர் எடப்பாடி.
திமுகவின் எல்லைக்குள் நெல்லை:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாநகரின் இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றியது. இதனால் நெல்லை அதிமுகவினர் சோர்ந்து போய் இருந்தனர். இதையடுத்து நிகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம் நெல்லை அதிமுகவினரை கடும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.
மத்திய கட்சியில் மண்ணின் மைந்தன்!
ஜெ. இருந்தவரை நெல்லை அதிமுகவின் தவிர்க்கமுடியாத முகமாக இருந்த தொழிலதிபர் நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவின் ஆரம்பகால முக்கியப் புள்ளியான கருப்பசாமிப் பாண்டியனும் தற்போது திமுகவில் இருக்கிறார். நயினார் நாகேந்திரனின் நெருங்கிய நண்பரும் கடந்த தேர்தலில் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டவருமான கல்லூர் வேலாயுதமும் தற்போது தினகரன் பக்கம் நிற்கிறார்.இதனால் கடும் நெருக்கடியில் நெல்லை அதிமுக இருக்கிறது. எனினும் முதலில் சசிகலா தரப்பிற்கு ஆதரவளித்த எம்.பிக்கள் விஜிலா,முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் தற்போது எடப்பாடி பக்கம் உள்ளனர்.
முக்கியத்துவத்தை மீட்பாரா முதல்வர்.
நெல்லை அதிமுகவின் முன்னாள் முக்கியப் புள்ளிகள் பலரும் கட்சியில் இல்லாத நிலையில் முதல்வர் நெல்லைக்கு வருகிறார். புதிய நிர்வாகிகளின் முயற்சியின் பேரில் நெல்லை வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் ஏற்பாடுகளும் தடல்புடலாக நடைபெறுகிறது. எனினும் ஜெ. இருந்த போது இருந்த அதிமுகவின் வீச்சை நெல்லையில் தற்போது காணமுடியவில்லை.
எது எப்படியிருந்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை அதிமுக யார் வசம் என்பது தெளிவாகிவிடும்.

Comments
Post a Comment