Skip to main content

திருநெல்வேலி காரங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்.!

சங்கத்த விட சாப்பாடு தான் முக்கியம்னு மழலைக் குரலில் தமிழகத்தையே மயக்கி விட்டான் நம் நெல்லை குட்டிப்பையன் பிரணவ். பிரணவிற்கு மட்டுமா, நம்ம திருநெல்வேலி காரங்களுக்கே சாப்பாடு தான் எப்பவுமே முக்கியம்.
அதற்கு சாட்சிகள் நிறைய இருக்கு.... வாங்க பார்க்கலாம்..

சாப்பாட்டுக்காவே பேமஸான ஊரு..!

நம்ம தமிழ்நாட்ல நிறைய ஊர்கள் பல விஷயங்களுக்கு பேமஸ்.

மதுரை - மல்லி
திண்டுக்கல் - பூட்டு
திருப்பூர் - பனியன்.
ஈரோடு - மஞ்சள்.
கோவை - கிரைண்டர்.

இப்படி எல்லா ஊர்களும் சாப்பாட்டை தவிர்த்து எல்லா விஷயங்களுக்கும் பேமஸ். ஆனா நம் திருநெல்வேலியோ சாப்பாட்டு விஷயத்துல மட்டும் தான் பேமஸ்..!

தித்திக்கும் திருநெல்வேலி:

நம்ம திருநெல்வேலிக்கு உலக லெவல் புகழை பெற்றுத் தந்தது அல்வா தான். இருட்டுக் கடை மட்டுமில்லாம லட்சுமி விலாஸ்,சந்திரா ஸ்வீட்ஸ்,சாந்தி ஸ்வீட்ஸ் ன்னு அல்வாவுக்கு பெயர்போன கடைகள் நம்மூர்ல நிறைய உண்டு.

தரமான நொறுக்குத் தீனிகள்:

தித்திக்கும் அல்வா திகட்டாமல் இருக்க காரம் வேணுமில்லையா... அதையும் விட்டுவைக்கல நம்மூரு காரங்க. மிச்சர்,பக்கோடா,முருக்குனு தரமா நொறுக்குதீனி தயாரிக்கும் நெல்லை ஸ்வீட் கடைகளுக்கு தமிழ்நாடெங்கும் பேன்ஸ் இருக்கிறார்கள்.

பார்டர் புரோட்டாவும், சங்கை பிரியாணியும்

திருநெல்வேலி மாநகரத்துல மட்டுமில்ல ஒட்டுமொத்த மாவட்டத்துலயும் இதே கதை தான். செங்கோட்டை பார்டர் கடை பரோட்டாவுக்கு அதில் முக்கியமான இடமுண்டு. அடுத்து சங்கரன்கோவில் சுல்தான் கடை பிரியாணி.. அப்படியே இந்த பக்கம் அம்பை அய்யர் கடை அல்வா, கல்லிடைக்குறிச்சி அப்பளம்,செட்டிக்குறிச்சி சேவு, திசையன்விளை கருப்பட்டி என லிஸ்ட் நீள்கிறது.

சாப்பாட்டு விஷயத்துல நம்ம கிங்.:

திண்பண்டங்களை தவிர்த்து விட்டு பார்த்தா இன்னொரு விஷயம் இருக்கு... அது சொதிக் குழம்பு சாப்பாடு.. ஆக இதுவும் சாப்பாடு ஐட்டம் தான்.. இப்படி திருநெல்வேலில எந்தப் பக்கம் போனாலும் சாப்பாடு விஷயத்துல நம்ம மக்கள் கிங்காக இருக்கிறார்கள்..

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா அந்த தம்பிக்கு மட்டுமில்ல நம்ம திருநெல்வேலி மக்களுக்கும் வாழ்கைல சாப்பாடு தான் ரொம்ப முக்கியம்.!
அப்டிதான..?😜

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...