Skip to main content

நம் நெல்லையர்கள் நாடோடிகளான கதை!


"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது தமிழின் புகழ்ப் பெற்ற முதுமொழி. இந்த புகழ்மொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ, நம் நெல்லையர்களுக்கு மிகச் சரியாக பொருந்தும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொற்கை துறைமுகத்தின் வழியே உலகை அளக்க புறப்பட்ட நமது பயணம் இன்றும் தொடர்கிறது.

உலகமயமாக்கல் நமக்கு பழசு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொற்கை முத்துகளும் பாண்டிய நாட்டு பொருள்களும் ரோமாபுரிக்கு பயணப்பட்டுள்ளன. தென்னாட்டின் மிக பரபரப்பான துறைமுகமாக நம் தாமிரபரணியின் கழிமுகப் பகுதி விளங்கியிருக்கிறது. ஆனால் கடல்கோளால் அந்த துறைமுகம் சீரழிந்தப் பிறகு கடல் வாணிபத்தில் நமது தென்பாண்டிச் சீமை பின்தங்கியது.

நாட்டுக்குள்ளே நாடோடியானோம்:
அதன்பின்னர் பொருள் தேடி இந்த இந்திய நிலப்பரப்பெங்கும் அலைந்து திரிந்தது நம் சமூகம். கடந்த முன்னூறு ஆண்டுகளில் மும்பை,சென்னை,பெங்களுரு,கோவை,
திருப்பூர் என்று வடக்கே பல நகரங்களை வளர்த்ததில் நம் நெல்லை மக்களின் பங்கு மிக மிக அதிகம்.

காரணம் என்ன:
நெல்லை மக்களின் இந்த நாடோடி வாழ்கைக்கு காரணங்கள் ஏராளம்.!
*படித்த படிப்புக்கு போதுமான வேலையில்லாத தொழில் சூழல்.
*‎இங்கே தொழில்துறைக்கு சாதகமான அம்சங்கள் பல இருந்தும் பாராமுகமாய் இருக்கும் சென்னை அரசியல்வாதிகள்.
*பிற பகுதி மக்களின் வாழ்வியலையும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற நம்மக்களின் ஆர்வம்.
*‎பழகிப்போன விவசாயத் தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாறும் எண்ணம் போன்றவை நெல்லை மக்களை நாடோடியாக மாற்றியதில் முக்கிய விஷயங்கள்.

தீர்வு என்ன:
90களின் இறுதியில் நம் நெல்லை பிராந்தியத்தில் நடந்த சாதிக்கலவரம் தென்னிந்தியாவையே உலுக்கியது. இதையொட்டி நடந்த ஆய்வில் போதிய வேலைவாய்ப்பின்மையே நம் நெல்லை மக்களை சா'தீ'ய வலைக்குள் சிக்க வைக்கிறது என்ற உண்மை வெளியே வந்தது.

தொழில்துறையும் செழிக்கட்டும்.
பெயரிலேயே நெல்லை வைத்திருக்கும் நெல்லைக்கு விவசாயமே சரிபடும் என்று பலரும் நினைக்கிறார்கள். விவசாயத்திற்கு லாயக்கற்ற பகுதிகளும் நெல்லையில் அதிகம் இருப்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் நெல்லையில் தொழில் துறை செழிக்கும். அப்படி நடந்தால் தான் நம் திருநெல்வேலி மக்கள்  நாடோடிகளாக திரியும் நிலைக்கு முடிவு பிறக்கும். அதுவரை நல்லது கெட்டதை மட்டுமே சொந்த ஊரில் அனுபவிக்கும் நம் மக்களின் இழிநிலை நீடிக்கவே செய்யும்.

"என்ன வளம் இல்லை இந்த திருநெல்வேலியில்...
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளியூரில்"

என்று கூற நாம் இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ.?😢

Comments

  1. Nanguneri ,kangaikondan la tidel park nu develop aana v can competite with other districts.


    We should prove our unity and show other districts that v r not seperated by caste for development.

    Meanwhile innovative startups will be most preferred solution for development

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நெல்லையில் அமையுமா ஐஐடி , என்ஐடி.?

    தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமை நம் திருநெல்வேலிக்கு உண்டு. நெல்லையின் பாளையங்கோட்டை கல்லூரி,பள்ளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நகரம்.  தென்தமிழகம் இன்று அடைந்திருக்கும் கல்வி வளர்ச்சியில் பாளையங்கோட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் பட்டதாரிகள் இன்று உலகம் முழுதும் செல்வாக்கு மிக்க இடத்தில் அமர்ந்துள்ளனர்.  சில ஆண்டுகள் முன்பு வரை அறவே தொழில் வளர்ச்சி இல்லாத நிலை நெல்லையில் தற்போது மாறிவருகிறது. அருகே தூத்துக்குடி மிதமான தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. நெல்லையிலும் தொழில் துறை அரும்பத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு,மனிதவளம் உள்ளிட்டவையும் நம்மிடம் சிறந்த வகையில் உள்ளது. தேவை ஐஐடி, என்ஐடி:      கல்வி ரீதியில் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பல திருநெல்வேலியில் அமைந்திருந்தாலும் இந்திய அரசின் கல்வி நிறுவனம் நெல்லையில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளூரில் தரம் வாய்ந்த கல்வி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதுவும் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரில் ஒரு இந்திய அரசு கல்வி நிறுவனமும் இல்லாதது

நெல்லையில் ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் கோவில்.!

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பலருக்கு நண்பராக, கடவுளாக விளங்குபவர் விநாயகர். இன்னும் சிங்கிளாக விளங்குவது அவரது தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட விநாயகருக்கு நம் நெல்லையில்  ராஜாகோபுரத்துடன் கூடிய தனிக் கோவில் கம்பீரமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா.? தாமிரபரணி நதிக் கரையோரத்தில் மணிமூர்த்தீஸ்வரம் என்னும் இடத்தில் அழகிய கோவில் ஆனைமுகனுக்கு அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு என்று பிரத்யேகமாக பல கோவில்கள் இருந்தாலும், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையார் கோவில் என்ற பெருமை நம் நெல்லை. மணிமூர்த்தீஸ்வரம் கோவிலுக்கே உண்டு. பிள்ளையார்பட்டியில் கூட துணைக் கடவுளாக மட்டுமே அருள்பாலிக்கும் விநாயகர் நம் நெல்லையில் மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நம்ம ஊரு விநாயகர் கமிட்டெட் ஆன விநாயகராக இங்கு வீற்றிருக்கிறார். ஆம், விக்னேஷ்வரி என்ற பெண் தெய்வத்தோடு  இங்கு அருள்பாளிக்கிறார் நம்மூரு உச்சிஷ்ட்ட விநாயகர். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், விழாக் கோலம் பூண்டுள்ளது இக்கோவில். வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து இக்கோவிலுக்கு சாலை வசதி உண்டு.! விநாயகர் சதுர்த்த

உலக நாகரிகத்தின் தொட்டில்: நெல்லை ஆதிச்சநல்லூர்

நாம் படிக்கின்ற காலத்தில் இந்தியாவின் மிகப்பழமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றே நம் வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே நம் நெல்லை தாமிரபரணி கரையோரத்தில் மிகச் செழிப்பான நாகரிகம் இருந்துள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகம். நம் தாமிரபரணி கரையோரப்பகுதி இப்போது போலவே அந்த காலங்களிலும் மிகச் செழிப்பாக இருந்துள்ளது. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை உயர்ந்த நாகரீகத்தை பின்பற்றி நம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆதியில் தோன்றிய ஆதிச்சநல்லூர்: நம் நெல்லையில் இருந்து பதினெட்டே கி.மீ தொலைவில் தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி இங்கே நடந்து கொண்டிருந்த சமயத்தில் அலெக்ஸாண்டர் என்ற தொல்பொருள் ஆய்வாளர் அகழாய்வை மேற்கொண்டார். அதில் அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.  ஆம், உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு ஒன்று அங்கே இருப்பதைக் கண்டு அசந்துபோனார். சுமார் 110 ஏக்கரில் அது அமைந்திருக்கிறது. இடுகாடே இத்தனை பெரியதாக இருந்தால் அங்கே மிகப் பெரிய நகரம் ஒன்றும் இருந்திருக்கும் என அறிவித்தார் அந்த