Skip to main content

நெல்லையை அலற விடும் ஆட்சியர் ஷில்பா.!



 இத்தனை நாட்களாக சேலம் ஆட்சியர் ரோகினி பக்கமாகவே திரும்பியிருந்த  தமிழக மீடியாக்களை தனது அதிரடி நடவடிக்கைகளால் நம் திருநெல்வேலி பக்கம் திருப்பியிருக்கிறார்  ஆட்சியர் ஷில்பா.!

முன்மாதிரியான ஆட்சியர்:

நெல்லையின் முதல் பெண் ஆட்சியர் என்ற பொறுப்பை ஏற்றதாலோ என்னவோ, நம் ஆட்சியர் பல நடவடிக்கைகளில் மற்ற அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

கடந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெறவிருந்த மதக்கலவரத்தை களத்தில் இறங்கி துணிச்சலாக திசைதிருப்பினார். இதனால் பெரும் மத மோதல் தவிர்க்கப்பட்டது.

அன்பு மகள் அங்கன்வாடியில்...

நடுத்தர வர்கத்தினரே தம் பிள்ளைகளை அங்கன்வாடியில் சேர்க்க யோசிக்கும் இந்த காலத்தில் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட தனது குழந்தையை துணிச்சலாக நம்மூர் அங்கன்வாடியில் சேர்த்து நெகிழ வைத்தார்.

அதிகாரிகளை அலறவிடுகிறார்:
தற்போது தனது மென்மையான போக்கிற்கு விடை கொடுத்து அதிரடியில் இறங்கியுள்ளார் ஆட்சியர் ஷில்பா. இது நெல்லை அரசு அலுவலர்கள் இடையே அலறலை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் விவசாய உதவித்தொகையை பெறுவதற்கு வயதான பெண்மணி ஒருவர் உள்ளூர் அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறிந்த ஆட்சியர் ஷில்பா, நெல்லை மாவட்ட விஏஓக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தாசில்தார்கள் தடாலடி மாற்றம்:

இந்நிலையில் திடீரென நம் நெல்லை மாவட்ட தாசில்தாரர்கள் பலரை பணியிட மாற்றம் செய்து மீண்டும் அதிரடி காட்டியுள்ளார். இதனால் நம் நெல்லை அரசு அதிகாரிகள் மத்தியில் ஒரு வித பதற்றம் தொற்றியுள்ளது. தேர்தல் நேரத்தில் ஏன் இந்த வீண்வேலை என அவர்கள் உள்ளுக்குள் புலம்புகிறார்களாம். இதுபற்றி போராட்டமும் நடைபெற்றுள்ளது.

நெல்லையில் உஷார் நிலை!




ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையால் நெல்லை மாவட்ட அரசு அலுவலகங்களில் உஷார் நிலை நிலவுகிறது. நம் ஆட்சியரின் இந்த அதிரடி ஆய்வுக்களுக்கு நெல்லை மக்கள் பெரும் வரவேற்பு தெரிவிக்கிறார்கள்.....!

Comments

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...