நெல்லை ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் பேருந்துகள் வெளியில் இருந்தே இயக்கப்படுகின்றன. அதனால் பயணிகள் கடும் வெயிலில் காத்திருக்கின்றனர்.
பெயரளவுக்கே நிழற்குடைகள்:
பாளை., டவுண் மற்றும் சேரன்மகாதேவி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் பெயரளவுக்கு இரண்டு நிழற்குடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அது நிரம்பி வழிவதால் வேறுவழியின்றி அக்னி வெயிலில் நனைகின்றனர் நெல்லை மக்கள்.
வயதான முதியோர்கள் தலையில் துண்டு போர்த்தி முகம் சுளித்து நிற்கிறார்கள்.
பள்ளிக் கல்லூரி மாணவர்களும் பேருந்துகளுக்காக கடும் வெயிலில் காய்கிறார்கள்.
நிழல் தருமா மாநகராட்சி?
கூடுதல் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்ற நெல்லை மக்களின் வேண்டுகோளுக்கு நெல்லை மாநகராட்சி காது கொடுக்குமா?

Comments
Post a Comment