எட்டு அடியில் நீர்மட்டம்.!
143 உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் தற்போது வெறும் எட்டு அடி மட்டுமே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. 1942 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து இந்த அளவுக்கு தண்ணீர் குறைந்த வரலாறே இல்லை என உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
தகிக்கும் பொதிகை மலை.!
வெயிலின் உக்கிரம் தாங்காமல் பொதிகை மலை தவித்து வருகிறது. மலையில் உள்ள ஜீவராசிகள் தண்ணீர் கிடைக்காமல் மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கி விட்டன. பிற வன விலங்குகளின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை.
வற்றியது தாமிரபரணி.!
வற்றாத ஜீவநதி என பெயர் பெற்ற தாமிரபரணி வரலாற்றில் முதல் முறையாக வற்றியுள்ளது. தாமிரபரணியின் இந்த பரிதாப நிலையால் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வருணபகவான் கைகொடுத்தால் மட்டுமே பிழைப்போம்.!
Comments
Post a Comment