எப்போதும் தண்ணீர் துள்ளி ஓடும் நம் தாமிரபரணி இப்போது பரிதவிப்பில் இருக்கிறது. நெல்லையை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம் பொதிகை மலையையும் விட்டுவைக்கவில்லை. விளைவு மாவட்டத்தின் அணைகள் வறண்டு அலங்கோலமாய் காட்சியளிக்கின்றன.
பரிதவிப்பில் பாபநாசம்:
கடந்த ஆண்டு பருவமழை நம் நெல்லையை ஏமாற்றியதால் பாபநாசம் அணை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறண்டு காணப்படுகிறது.
அணையின் உச்சநீர்மட்டம் 143அடி.
இப்போது இருப்பது வெறும் 16.30 அடி.!
இப்போது இருப்பது வெறும் 16.30 அடி.!
அதிலும் பாதிக்கும் மேல் சகதி தான்.
அணைக்கு நீர்வரத்தே இல்லாத நிலையில் குடிநீருக்காக மட்டும் நீர் திறக்கப்பட்டுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அதிகப்படியான நீரை தேவையின்றி வெளியேற்றியதே அணையின் வறட்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆறுதல் அளிக்கும் மணிமுத்தாறு.!
கடும் கோடை நிலவும் இந்த நேரத்தில் நம் நெல்லைக்கு சற்றே ஆறுதல் தருகிறது காமராஜர் கட்டிய மணிமுத்தாறு.
தென்தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணையில் தற்போது 72.32 அடி நீர் இருப்பில் உள்ளது.
இதனை வைத்து இந்த கோடையை சமாளித்து விடலாம் என அரசாங்கம் தெரிவிக்கிறது.
எனினும் வரவுள்ள தென்மேற்கு பருவமழையும் நம்மை ஏமாற்றினால் வரும் காலங்களில் நம் தாமிரபரணி வற்றிப்போய் மிகப் பெரிய குடிநீர் தட்டுப்பாட்டை நம் நெல்லை சந்திக்கும் என்பது உண்மை.!
Comments
Post a Comment