திராவிட அரசியலுக்கு மாற்று வேண்டும் என்னும் குரல்கள் சமீபகாலமாக பெருகி வருகிறது. ஏனென்றால்
தமிழ்நாட்டின் அரசியலை ஐம்பது ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது திராவிட சித்தாந்த கட்சிகள் தான். அவ்வளவு வலிமையான திராவிட சிந்தாந்தத்தின் பிறப்பிடம் நம் திருநெல்வேலி தான்.!
தமிழ்நாட்டின் அரசியலை ஐம்பது ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது திராவிட சித்தாந்த கட்சிகள் தான். அவ்வளவு வலிமையான திராவிட சிந்தாந்தத்தின் பிறப்பிடம் நம் திருநெல்வேலி தான்.!
திராவிடம் பிறந்தது நெல்லையில்!
சமயப்பணி செய்ய நெல்லை வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் முதலிய மொழிகளை ஆய்ந்துநோக்கி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்டார். மேலும் இந்த மொழிகளை திராவிட மொழிகள் என்றும் இம்மக்களை திராவிடர்கள் என்றும் அவர் தான் முதலில் அழைத்தார்.
நம் நெல்லையில் இருந்து அவர் கண்டுபிடித்த அந்த வார்த்தைகள் இன்றளவும் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றன.
பெரியாரை உலுக்கிய சேரன்மகாதேவி!
1924 ஆம் ஆண்டில் நெல்லை சேரன்மகாதேவி குருகுலத்தில் நடந்த தீண்டாமை சம்பவமே பெரியாரை காங்கிரசிலிருந்து வெளியேற வைத்தது. அதன் பின்னர் சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார் நம் நெல்லையில் பிறந்த சொல்லான "திராவிடர்" என்ற பெயரிலேயே கட்சி தொடங்கினார். அவரின் அந்த கட்சி தான் பின்னர் திமுகவாகவும் அதிமுகவாகவும் தோன்றி இன்று ஆலமரங்களாக நிற்கின்றன.
திராவிட சிந்தாந்தவாதியான நெல்லையர்:
திராவிட சித்தாந்தத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றவர்களில் முக்கியமான இடத்தை பிடிப்பவர் நெல்லையரான வைகோ.
இன்று இவரின் அரசியல் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அன்று இவரை சமாளிக்க இந்திரா காந்தியே தடுமாறினார் என்பது தான் உண்மை.
நாடாளுமன்ற விவாதங்களில் திராவிட சித்தாந்தத்தை புகுத்தி இவர் பேசிய பேச்சுகள் அதிதீவிரமானவை.
இப்படி திராவிட சித்தாந்தத்தை தமிழ்நாட்டிற்கே வழங்கிய நம் நெல்லைக்கு திராவிடக் கட்சிகள் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும்.
செய்தார்களா.?
Comments
Post a Comment