மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்துள்ளார் மோடி. ஆனால் தமிழ்நாட்டில் மோடியை வீழ்த்தி திமுக கூட்டணி அபார வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் அதிமுக வசம் இருந்த நம் நெல்லை பாராளுமன்ற தொகுதி தற்போது திமுக வசம் சென்றுள்ளது. இதனால் நம் நெல்லைக்கு சாதகமா.? பாதகமா.? அலசுவோம் வாருங்கள்..
தமிழகத்தை வச்சி செய்யப்போகும் பாஜக:
படுதோல்வியால் தமிழக பாஜக தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஏன் மோடிக்கு வாக்களிக்காமல் போனோம் என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள் என தமிழிசை பகிரங்கமாகவே பேசிவிட்டார். எனவே வரும் காலங்களில் நம் தமிழகம் படாதபாடு படப்போவது தொிகிறது.
நெல்லைக்கும் தொல்லை.!
திமுக உறுப்பினரை தோ்ந்தெடுத்துள்ளதால், நம் நெல்லைக்கும் பலத்த ஆப்பு காத்திருப்பதாகவே தோன்றுகிறது. அதிமுக சார்பில் களத்தில் இருந்த மனோஜ் பாண்டியன் வென்றிருந்தால் மத்திய அமைச்சராகி இருப்பார். ஆனால் அது நடக்கவில்லை.
நெல்லையில் இனி என்ன நடக்கும்?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நம் நெல்லை இணைந்துள்ளதால், பல முன்னேற்றத் திட்டங்கள் இங்கே நடந்து வருகின்றன. அதில் இனி சுணக்கம் ஏற்படலாம்.
பொிய தொழிற்சாலைகள் இங்கு வரவேண்டுமென்றால், மத்திய மாநில அரசுகளின் தயவு பெருமளவு வேண்டும். அதுவும் இப்போது நம்மிடம் இல்லை. எனவே அந்த கனவும் நினவாக வாய்ப்பில்லை.
எம்.பி நினைத்தால் நடக்கும்:
இந்த இக்கட்டான சூழலில் நம் முன் இருக்கும் வாய்ப்பு ஒன்றே ஒன்று தான். நம் கோரிக்கைகள் குறித்து நமது நெல்லை எம்.பி பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தால் மட்டுமே திருநெல்வேலி தப்பிக்கும்.
இல்லையெனில் நமது கனவு மீண்டும் கானல் நீராக இருக்கும்.!
டெல்லியில் சீறுவாரா நம் நெல்லை எம்.பி..?

Comments
Post a Comment