தமிழகத்தில் எத்தனையோ நகரங்கள் இருக்க திருநெல்வேலியை மட்டும் ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது. இந்த கேள்வியை வெளியூர் மக்களிடம் வைத்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொன்னார்கள். அவற்றுள் மிக முக்கியமான காரணங்களை இப்போது பார்ப்போம்.
தாமிரபரணி:
தமிழ்நாட்டில் ஓடும் ஒரே வற்றாத ஜீவ நதியாக அது இருப்பதால் அதன் கரையில் இருக்கும் திருநெல்வேலியை எங்களுக்கு பிடிக்கும் என்றனர் சிலர். மேலும் அதன் சுவை தனித்து இருப்பதும் எங்களை கவர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் திருநெல்வேலி வாழ்கையை எங்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள்.
திருநெல்வேலி அல்வா:
தாமிரபரணி தண்ணீரின் சுவையில் கிண்டப்படும் அல்வாவை தயாரிப்பதால் திருநெல்வேலியை நினைத்தாலே இனிக்கும் என்கின்றனர் சிலர். மேலும் எத்தனையோ வகையான அல்வாக்கள் வந்துவிட்ட போதிலும் இன்னமும் மவுசு குறையாமல் திருநெல்வேலி அல்வா திகழ்வதாக அவர்கள் பூரிக்கிறார்கள்.இதனால் தான் தங்களுக்கு தெரிந்த திருநெல்வேலி காரர்களிடம் அல்வா வாங்கிவரச் சொல்லி நச்சரிக்கிறார்களாம்.
நெல்லை மக்களின் அன்பு:
காலங்காலமாக வெளியூர் சென்று பொருள் தேடும் வழக்கத்தை கொண்ட நம் நெல்லை மக்கள் பெற்றுள்ள பெரிய விருதுகளுள் இந்த பெருமை முக்கியமானது. பிறர் மீதான அக்கறை கலந்த அன்பால் தான் போன ஊரிலும் மக்களை கவர்ந்து வென்றுவிடுவார்கள் நம் நெல்லையர்கள். அதற்கு உதாரணமாக பல தொழில் அதிபர்களை கூறமுடியும்.
சுற்றுலா:
தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாக நெல்லை திகழ்வதால் திருநெல்வேலியை அவர்களுக்கு பிடித்துள்ளதாம். குற்றாலம்,பாபநாசம்,மணிமுத்தாறு என செலவில்லாமல் நிறைவான ஆனந்தத்தை அந்த இடங்கள் தருகின்றன. இதுவும் பிற மக்களுக்கு நம் திருநெல்வேலியை பிடிக்க காரணமாக அமைந்துள்ளது.
நெல்லைத் தமிழ்.:
இவ்வளவு அழகான ஊரில் இருந்து வரும் தமிழும் அழகாகத் தானே இருக்கமுடியும். அதனால் திருநெல்வேலி தமிழை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்கள். எங்களுக்கு தெரிந்த திருநெல்வேலி காரர்களிடம் அவர்களின் தமிழை கேட்பதற்காக ஏதாவது பேசிக்கொண்டே இருப்போம் என்றும் சொல்கிறார்கள்.
திருநெல்வேலிக்காரர்களுக்கு மட்டுமல்ல மற்ற ஊர்க்காரர்களுக்கும் நம்ம ஊரைப் பிடிக்கிறது என்றால் சும்மாவா.! கெத்துதானே.?

Nice to see you explain to the Tirunelveli
ReplyDelete