Skip to main content

ஸ்மார்ட்சிட்டி தரவரிசையில் நெல்லைக்கு கடும் பின்னடைவு.!

ஸ்மார்ட் சிட்டி தரவரிசையில் திருநெல்வேலி 78வது இடத்தை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இந்த திட்டத்திற்கு பல கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நகரங்களில் இதுவரை நடைபெற்ற பணிகளின் அடிப்படையில் ஒரு தரவரிசை பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 87 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் நம் திருநெல்வேலி 78 வது இடத்தில் உள்ளது.

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் தீட்டப்பட்டன.

தரமான சாலைகள், தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் திட்டம், புதிய பூங்காக்கள் ,நயினார்குளத்தில் படகு குழாம், பேருந்து நிலையங்கள் நவீனமயம், டவுண் ரதவீதிகள் சீரமைப்பு என பல திட்டங்கள் திட்டமிடப்பட்டன.

எனினும் பணிகள் வேமெடுக்காமல் மந்த கதியில் இருக்கிறது. இதனால் தரவரிசை பட்டியலில் நெல்லை மாநகரம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதே நேரத்தில் நம் அண்டை நகரமான தூத்துக்குடி 80வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...