திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பொதிகை மலை ஐ.நாவின் உயிர் கோள பாதுகாப்பு மண்டலங்களுள் ஒன்று. தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும் தாமிரபரணி இந்த மலையில் தான் உற்பத்தி ஆகிறது. தாமிரபரணி மட்டுமின்றி இன்னும் இரண்டு நதிகளுக்கு ஆதாரமாகவும் இந்த பொதிகை மலை விளங்குகிறது.
1. குமரி தாமிரபரணி (குழித்துறை ஆறு)
இந்த ஆறு குமரி மாவட்டத்தில் ஓடும் ஆறு ஆகும். நம் தாமிரபரணியின் கிளை ஆறுகளுள் ஒன்று என்றும் இதை சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையயில் இருந்து தெற்கு நோக்கி இந்த நதி பாய்கிறது. தாமிரபரணி உருவாகும் அதே பொதிகை மலையில் தோன்றுவதாலும், நம் தாமிரபரணி நதியின் சுவையை கொண்டிருப்பதாலும் இந்த பெயரை குமரி மாவட்ட மக்கள் வைத்துள்ளார்கள்.
2. நெய்யாறு:
பொதிகை மலையில் பெய்யும் மழை நீர் கிழக்கு நோக்கி பாய்ந்து தாமிரபரபரணியாக உருவெடுப்பது போல், மேற்கு நோக்கி பாய்வது நெய்யாறு. இந்த நதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஓடி நீரோடி அருகே கடலில் கலக்கிறது. இந்த நதியும் தாமிரபரணி உருவாகும் அதே பொதிகை மலையில் தான் பிறக்கிறது. இந்த நதியின் சுவையும் நம் தாமிரபரணியை போலவே மிகுந்த குளிர்ச்சியும்,சுவையும் மிகுந்தது.
இப்படி தாமிரபரணி,குழித்துறை ஆறு,நெய்யாறு என மூன்று ஆறுகளுக்கு ஆதாரமாக விளங்கும் நம் பொதிகை மலையை இமயமலைக்கு நிகராக ஒப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.!

Comments
Post a Comment