Skip to main content

S.N ஹைரோடு: திருநெல்வேலியின் உயிர் நாடி.

நெல் வயல்களையே வேலியாக கொண்ட திருநெல்வேலி இன்று மிகப் பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. விவசாயசத்தையே பிராதான தொழிலாக செய்து வந்த நெல்லை இன்று நவீன பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பழமையான வயல்வெளி பாதைகள் இன்று ஹைரோடுகளாக புது அவதாரம் எடுத்து நிற்கின்றன. அப்படி நெல்லை மாநகரத்தின் அழகிய தெருவாக விளங்கிய நெல்லையப்பர் சன்னதி தெரு, சுவாமி சன்னதி ரோடாகி, இன்று சுவாமி நெல்லையப்பர் நெல்லையப்பர் ஹைரோடாகி பரபரக்கிறது.

அன்று:

அழகிய நெல்லையப்பர் கோவிலுக்கு நேரெதிராக நீண்ட வீதியாக இது இருந்துள்ளது. நேராக கொக்கிரகுளம் தைப்பூச மண்பத்தில் தாமிரபரணி கரையில் முடியும் வகையில் இது அமைந்திருந்ததது. 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ளதாக அமைந்த இந்த வீதியின் இரு புறங்களிலும், பசுமையான வயல்வெளிகளும், வாய்க்கால் வரப்புகளும் மிகுந்திருக்குமாம். இன்றைய சேரன்மகாதேவி வயல்வெளி சாலையை போல அன்று இருந்திருக்கக்கூடும். பின்னர் சிறிது சிறிதாக பள்ளி, சினி கொட்டகை, கடைகள், என தோன்றி வணிக வீதியாக மாறியுள்ளது.

இன்று:

நெல்லையப்பரின் சன்னதி வீதி இன்று ஹைரோடாக மாறி நிற்கிறது. மணிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கும்    தமிழகத்தின் மாபெரும் மாநகர சாலைகளுள் ஒன்றாக அது மாறியிருக்கிறது. திருநெல்வேலி மாநகரை இயக்கும் பல அலுவலகங்கள் இந்த சாலையில் இயங்குகின்றன. மாநகராட்சி அலுவலகம், எம்.எல்.ஏ அலுவலகம், தாலுகா அலுவலகம், திரையரங்கு, சமூக அரங்கங்கள், வெளியூர் நகை மாளிகைகள், உள்ளூர் சில்லறை வியாபார கடைகள் என நெல்லையின் வர்த்தக பெருஞ்சாலையாக இச்சாலை விளங்குகிறது. லட்சக்கணக்கானோருக்கு கல்வி அளித்த  பாரம்பரியமிக்க சாப்டர் பள்ளி, பல சூப்பர் ஸ்டார்களை திரையில் காட்டிய ரத்னா,சென்ட்ரல்,பார்வதி,பூர்ணகலா,ரயில்பாதை தியேட்டர், எலிசபத் ராணி நினைவாக கட்டப்பட்ட ஆர்ச் என பாரம்பரியங்களையும் தாங்கி நிற்கிறது இச்சாலை.

பாரம்பரிய நெல்லை நகரை மற்ற பகுதிகளோடு இணைக்கும் தனியொரு சாலையாக இது இன்று திகழ்கிறது. இந்த சாலையில் குறுக்கிடும் ரயில்பாதைக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக ஈரடுக்கு பாலம்   இந்த  சாலையில் தான் கட்டப்பட்டது என்பதன் மூலம் இந்த சாலையின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இன்றும் திருநெல்வேலியின் உயிர் நாடியாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலை நெல்லையப்பர் கோவில் வாசலில் தொடங்கி எந்த திருப்பமும் இன்றி நேராக திருச்செந்தூரில் முடிகிறது. வழியில் ஆதிதமிழர் வாழ்ந்த ஆதிச்சநல்லூர் இருப்பது குறிப்பிடத்தக்கது. நம் திருநெல்வேலியின் பாரம்பரியம் சாதாரணமானதல்ல.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...