கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களால் கடவுளின் சொந்த தேசம் என்று அழைக்கப்பபடுகிறது கேரள மாநிலம். இந்த மாநில ரயில் பாதைகள் இயற்கையோடு இணைந்து ரம்மியமாக அமைந்துள்ளன. பசுமையான மலைகள்,அழகிய பள்ளத்தாக்குகள் என இந்தியாவின் மிகச் சிறந்த இயற்கை சுற்றுலா தடமாக இது திகழ்கிறது. இந்த தடத்தில் கேரளத்துக்கு உள்ளாகவே பல ரயில்கள் இயக்கப்பட்டு வந்தபோதிலும் திருநெல்வேலியோடு முழுவதும் இணைக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. செங்கோட்டை-புனலூர் மலைப்பாதை நேற்று திறந்துவைக்கப்பட்டதால், நெல்லை மாவட்டம் நேரடியாக கேரளாவோடு இணைந்தது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பாதையில் நாளை மறுநாள் (9ம் தேதி) முதல் ரயில்கள் ஓட உள்ளது. கேரள மாவட்டமான பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை இயக்கப்ட்டுவந்த பாலருவி எக்ஸ்பிரஸ் தென்காசி,அம்பை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், கொல்லம்-தாம்பரம், கொல்லம்-மதுரை,கொல்லம்-நெல்லை என புதிய ரயில் சேவைகளும் விரைவில் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இயற்கை விரும்பிகளுக்கு வரப்பிரசாதம்:
தொடங்கவுள்ள புதிய ரயில் பாதை இயற்கை காதலர்களுக்கும், வன விரும்பிகளுக்கும் பெரும் விருந்தாக அமைய உள்ளது. செங்கோட்டை-ஆரியங்காவு கணவாய் வழியாக இந்த பாதை செல்வதால் அடர்ந்த மலைப்பகுதிகளை கண்குளிர தரிசிக்கமுடியும். தற்போது பருமழைக் காலம் துவங்கியுள்ளதால், இயற்கையின் ஆனந்த கூத்தாட்டத்தை புத்துணர்வோடு அனுபவிக்க திருநெல்வேலி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்லையின் சுற்றுலா பெருமைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

Comments
Post a Comment