தாமிரபரணி-நெல்லை |
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் பரவலாக மழையும்,ஒரு சில இடங்களில் சாரல் மழையும் தூறிவருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் மழை பெய்துவருகிறது. குற்றாலvy ம்,தென்காசி,செங்கோட்டை,புளியரை,பாபநாசம்,மணிமுத்தாறு முதலிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்வதால் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீரோட்டம் பெருகுகிறது.
நெல்லையை தாலாட்டும் தென்றல்:
கேரள அரபிக்கடலில் இருந்து திரண்டு வரும் மேக கூட்டங்கள் மலை மீது மழையை பொழிந்து பின்னர் நெல்லையை தேடி வருகிறது. இதனால் மிதமான வானிலையோடு தென்பொதிகை தென்றலும் நம் நெல்லையை தாலாட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிறு தூறலும் விழுவதால் இதமான சூழ்நிலை இங்கே நிலவுகிறது.!
Comments
Post a Comment