Skip to main content

பிளக்கிறது நெல்லை.பிறக்கிறது தென்காசி.!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் திருநெல்வேலியை இரண்டாக பிரிக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கிவிட்டது. தென்காசி நகரை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமொன்று மலரவுள்ளது.

சிதறும் நெல்லை

ஆங்கிலேயர் ஆட்சியில் பரந்து வரிந்த மாவட்டமாக இருந்த திருநெல்வேலி அடுத்து வந்த ஆட்சியாளர்களால் ராமநாதபுரம்,விருதுநகர்,தூத்துக்குடி என துண்டாடப்பட்டது. தற்போது அதுமேலும் பிளவுபட காத்திருக்கிறது.

மக்கள் விருப்பம் என்ன?

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க அரசு முயன்று வருவதை நம் மக்கள் பலரும் விரும்பவில்லை. எனினும் தென்காசி சுற்றுவட்டார பகுதி மக்களின் கருத்து வேறு வகையில் உள்ளது. தங்கள் ஊர் மாவட்ட தலைநகரமாக மாறுவதை அவர்கள் விரும்புகிறார்கள்.

நெல்லைக்கு பேரிழப்பு:

தென்காசி தனிமாவட்டமாக பிரிந்தால் நெல்லைக்கு அது பெரும் இழப்பாகும்.
• குற்றாலம் இனி நெல்லை மாவட்டத்தில் இருக்காது.
• ‎செங்கோட்டை பார்டரை இழப்போம்.
• ‎செழிப்புமிக்க பல விவசாய ஊர்கள் அங்கே சென்றுவிடும்.
• ‎அழகிய அணைக்கட்டுகள் பல அம்மாவட்டத்தோடு இணையும்.
• ‎மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி நம்மிடம் இருக்காது.
• ‎பாபநாசம்,மாஞ்சோலை முதலியவை எந்த மாவட்டத்தில் இருக்கும் என தெரியவில்லை.

லாபம் என்ன:

• மாவட்டம் பிரிந்தால் நெல்லை ஆட்சியர் மற்றும் பிற அலுவலர்களின் பணிச் சுமை குறையும்.

இதைத்தவிர வேறொன்றும் நமக்கு லாபம் இல்லை.!

ஏற்கனவே பல பிள்ளைகளை பெற்றெடுத்த நெல்லை தற்போது மற்றுமொரு பேறுகாலத்திற்கு தயாராவது வருத்தம் கலந்த சந்தோஷத்தையே நெல்லை மக்களுக்கு அளிக்கிறது.

Comments

  1. Tirunelveli than correct pirikkathinga

    ReplyDelete
  2. நான் தென்காசி தான் இருப்பினும் இதில் சிறிதளவு கூட உடன்பாடில்லை
    இது நம் உடலில் இருந்து இயதத்தை பிரித்தெடுப்பது போல😑

    ReplyDelete
  3. Athu athu iruka vendiya idathula iruntha than mariyatha. Yen thenkasi nellai kooda irukirathu than azhagu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...