திருநெல்வேலியின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்கும் நம் தாமிரபரணி நதியில் வரும் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 22 வரை மகா புஷ்கரணி விழா நடைபெறவுள்ளது. ஞானத்திற்கு உகந்தவராக கருதப்படும் குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு மகா புஷ்கரமாக கொண்டாடப்படவுள்ளது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால் இந்திய அளவிலான முக்கியத்துவத்தை நம் தாமிரபரணி நதி பெற்றுள்ளது. இன்னும் 144 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இவ்விழா மீண்டும் நம் மண்ணில் நிகழுமாம்.
எனவே இது குறித்து நெல்லை மக்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்விற்கு எதிராக சில கட்சிகளும் அமைப்புகளும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிகழ்வால் தாமிரபரணி பெருமளவு மாசுபட்டு விடும் என்றும் இந்நிகழ்வு இதற்கு முன்பு நெல்லையில் நடந்ததில்லை என்றும் பல வாதங்களை முன்வைக்கிறார்கள். 1882 திருநெல்வேலி சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகவில்லை என்ற நியாயமற்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.
இது நெல்லை மக்களை ஒரு வித கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பன்னெடுங் காலமாக நெல்லையின் கலாச்சாரமும், அரும்பெருமைகளும் அழுத்தி வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த நிலை தற்போது தான் மாறத்துவங்கியுள்ளது. புண்ணிய நதிகள் பட்டியலில் நம் தாமிரபரணி புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இந்நிலையில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இவ்விழா நம் நெல்லையை குறித்தும் தாமிரபரணியின் சிறப்புகள் குறித்தும் இந்திய அளவிவில் பிரபலப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.
ஒரு கோடி மக்கள் திரளவுள்ள இவ்விழாவால் நெல்லை மாவட்டம் விழாக் கோலம் பூணவுள்ளது.
மேலும் இவ்விழாவால் மாசு ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
நாமும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம். தாமிரபரணியின் பெருஞ்சிறப்புகளை உலகெங்கும் பரப்புவோம்.!

Comments
Post a Comment