கேரளத்தில் பருவமழை ஓய்ந்ததை அடுத்து நம் நெல்லையில் வெயிலின் உக்கிரம் உச்சியில் நின்று ஆடுகிறது. கடந்த மூன்று மாதங்களாக கேரளத்தை நனைக்க வந்த தென்மேற்கு பருவமழை நம் நெல்லையையும் எட்டிப் பார்த்ததால்
நம் மாவட்டமே சாரல் மற்றும் தென்றலில் சிலிர்த்திருந்தது.
ஆனால் தற்போது மே மாத வெயிலுக்கு நிகராக பகல் நேர வானிலை வாட்டி வதைக்கிறது. வீட்டில் இருந்தாலும் வெக்கை சூழ்ந்துள்ளதால் மக்கள் ஆறு, வாய்க்காலுக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வப்போது மின்வெட்டும் ஏற்படுவதால் பெரும் சிரமத்திற்கு நெல்லை மக்கள் உள்ளாகியுள்ளனர்.
விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நம் நெல்லையை குளிர்வித்து தாமிரபரணியை புரண்டோட செய்யவேண்டும் என நெல்லை மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
Comments
Post a Comment