பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வரும் செப் 24 முதல் அக். 7 வரை கடுத்த அவதி காத்திதிருக்கிறது. பாளைக்கு மின்சாரம் வரும் மின்பாதையில் "திடீர்" பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அன்றைய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு நடவடிக்கையை பாளை உப மின்நிலையம் எடுக்கவுள்ளது.
பாதிக்கப்போகும் பகுதிகள்:
பாதிக்கப்போகும் பகுதிகள்:
புது பஸ்டாண்ட்,ரெட்டியார்பட்டி,மேலப்மபாளையம், ம.ராஜ.நகர்,தி.ராஜ.நகர்,சிவந்திபட்டி,பெருமாள்புரம்,பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை,சாந்தி நகர், கே.டி.சி நகர்,வி.எம்.சத்திரம்.
இந்த மின்தடையால் நெல்லையின் பாதி மாநகர பகுதிகள் பகல் நேரத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் தொடங்கி செய்துங்கநல்லூர் வரை மின்தடை ஏற்பட உள்ளதால் வீடுகள்,பள்ளி,கல்லூரிகள்,மருத்துவமனைகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட உள்ளனர். இப்போது வறுத்தெடுத்துவரும் வெயில் அப்போதும் தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.!
Comments
Post a Comment