ஆண்டுதோறும் செப்டம்பர் இறுதியில் துவங்கும் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டும் கடும் மழைப் பொழிவை தரப்போகிறதாம்.தென்மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக 30% கூடுதலாக மழை பெய்யவுள்ளதாக தனியார் வானிலை மைய அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மன்னார்குடியை சேர்ந்த பிரபல வானிலை ஆய்வாளர் திரு செல்வக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நமது உழவன் என்ற வாட்ஸப் குழுவிலும் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஏற்கனவே கேரளாவை புரட்டிப் போட்ட பெருமழை நம் தாமிரபரணியிலும் வெள்ளப்பெருக்கை உண்டாக்கியது. இந்நிலையில் வரும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் நெல்லைக்கு மழை அதிகம் கிடைக்கும் என்ற செய்தி விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அணைகளில் போதிய கொள்ளளவு இல்லாததால் வெள்ளநீர் வீணாக கடலுக்கு செல்லும் என்பதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். எனினும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் இத்தகவலை நாம் கொண்டாடலாம்.!

Comments
Post a Comment