திருநெல்வேலி என்ற பெயருக்குத்தான் எத்தனை பெருமைகள். இயற்கை அள்ளித்தந்தது ஏராளம் என்றாலும், நம் பண்பாட்டாலும் பழக்கவழக்கத்தாலும் நாம் சேர்த்த சொத்துகளுள் முக்கியமானது மதநல்லிணக்கம். தமிழ்நாட்டில் திருநெல்வேலியை விட மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு மாநகரம் இருக்க முடியாது. இந்துக்களால் நெல்லையும், இஸ்லாமியர்களால் மேலப்பாளையமும், கிருஸ்தவர்களால் பாளையும் உயிர்பெற்று செழித்தன.
நெல்லையப்பர் தேரோட்டம் இந்துக்களுக்கானது மட்டுமல்ல திருநெல்வேலிக்கானது. மேலப்பாளையத்தின் ரம்ஜான் பிரியாணி வாசத்திற்கு திருநெல்வேலியே அடிமை. பாளை கிருஸ்தவக் கல்லூரிகளும் பள்ளிகளும் திருநெல்வேலிக்கே ஞான ஒளி ஊட்டின.
வெளிநாட்டில் இருந்து மதத்தை பரப்ப வந்தவர்களை மனம் மாறச் செய்து சமூகச் சேவை பக்கம் திருப்பிய மண் இந்த திருநெல்வேலி மண். ஆங்கில சீமைதுரைகளையும் காதல் கொள்ளச் செய்த தமிழ் நம் நெல்லைத் தமிழ். இப்பேற்பட்ட பூமியில் மத வன்முறையா.?
நம் நெல்லை மதத்தால் அல்ல, மனிதத்தால் உயிர் வாழும் மண்.!
அத்தகைய பாரம்பரிய பண்பாட்டின் மீது கல்லெரிவதை நாம் அனுமதித்தல் ஆகாது.
மதத்தை விலக்கி மனிதம் காப்போம்.
ஒற்றுமையாய் வாழ்வோம் திருநெல்வேலிக்காரனாய்.!

Comments
Post a Comment