தமிழகத்தின் முக்கிய நகரமாகவும், மதுரைக்கு தெற்கே மிகப் பெரிய நகரமாகவும் விளங்குவது நம் திருநெல்வேலி. தினந்தோறும் பல்லாயிரக்காண மக்கள் தொழில்,வர்த்தகம் மற்றும் கல்வி சார்ந்து நம் நெல்லைக்கு படையெடுக்கின்றனர். மேலும் சுற்றுலா சம்பந்தமாகவும்,சொந்த பந்தங்களை பார்த்து விட்டு செல்லவும் நம் திருநெல்வேலிக்கு அநேகம் பேர் வருகிறார்கள். இவர்களின் பேருந்து போக்குவரத்துக்காக இரு இடங்களில் பெரிய பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. ஒன்று வெளியூர் செல்வதற்கும் மற்றொன்று மாநகர பயணங்களுக்கும் உதவுகின்றன.!
பெரும் குறை:
இருந்தும் தனியார் நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வெளியூர் ஆம்னி பேருந்துகளுக்கு தனி பேருந்து நிலையம் அமையாதது பெரும் குறையாக உள்ளது. பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் ஜங்ஷனையே தங்களின் நிலையமாக பயன்படுத்துவதால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் ஜங்ஷன் சிக்கித்தவிக்கிறது. கடந்த ஆண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பேருந்து நிலையம் அருகே தனிப் பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஆட்சியரின் பணி மாறுதலால் அது கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அதற்கு காலம் கனிந்துள்ளது.
விரைவில் அமைகிறது:
சுமார் 79 கோடியில் நம் ஜங்ஷன் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளதால் இங்கு இயங்கும் ஆம்னி நிலையம் விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவ்வாறு மாற்றப்படும் போது ஆம்னி பேருந்து நிலையம் கொண்டுள்ள ஒரு சில தமிழக மாநகரங்கள் பட்டியலில் நம் திருநெல்வேலியும் இணையும்!

Superb
ReplyDelete