தமிழகத்தின் கடைகோடி, இந்தியாவின் கடைகோடி மாவட்டமாக கன்னியாகுமரி இருந்தாலும் இயற்கை அதற்கு எந்த குறையும் வைக்கவில்லை. தமிழ் நிலவகைகள் ஐந்தில் நான்கு இங்கு தனது
ஈவிரக்கமற்ற செழிப்பை காட்டுகின்றன. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இங்கு வாழ்கிறார்கள் குமரி மக்கள். குமரியை குட்டிக் கேரளா என்று அழைத்தாலும் தவறில்லை.
திருநெல்வேலிக்கு பொறாமை:
தமிழ் நிலங்கள் ஐந்தையும் உள்ளடக்கியுள்ள நம் நெல்லைக்கு குமரி பொறாமையை ஏற்படுத்துகிறது. நம் நெல்லையில் குற்றாலம் என்றால் அங்கே திற்பரப்பு, இங்கே பாபநாசம்,மணிமுத்தாறு என்றால் அங்கே பேச்சிப்பாறை,பெருஞ்சானி. நமக்கு மாஞ்சோலை என்றால் அவர்களுக்கு கோதையாறு. இங்கே உவரியென்றால் அவர்களுக்கு முக்கடல் சூழ்ந்த குமரி.
ஒரே ஒரு குறை என்னவென்றால் நமக்கு கிடைத்த தேரிக் காடு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதுசரி செழித்த பூமியில் வறட்சிக்கு ஏது இடம்.!
இப்படி எல்லாவற்றிலும் நமக்கு பதில் சவால் விடும் குமரி, தமிழிலும் சவால் விடுகிறது. தெளிந்த தமிழ் பேசும் நமக்கு இசை கலந்த அவர்களது நாஞ்சில் தமிழை கேட்கும் போது இனிமையாகத் தான் இருக்கிறது.
பிரிப்பதும் இணைப்பதும்:
நம்மையும் குமரியையும் மேற்கு தொடர்ச்சி மலையே பிரிக்கிறது. அது பிரித்தாலும் அதிலிருந்து உருவாகும் நதிகளே நம் இரு மாவட்டங்களையும் வாழ வைக்கிறது. நம் திருநெல்வேலியை விஞ்சிய இயற்கை வளங்களை கன்னியாகுமரி கொண்டிருந்தாலும், உணர்வால் தமிழராய்,உயிரால் பொதிகை மலையின் பிள்ளைகளாய் நாம் இணைந்தே இருக்கிறோம்.இருப்போம்.!

Comments
Post a Comment