சமீபத்தில் வெளியான பிரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழக மக்களிடையே மனமுவந்த வரவேற்பை பெற்றுள்ளது. நம் திருநெல்வேலியை கதைக்களமாக கொண்ட படங்கள் எப்போதும் பெருவெற்றி பெறும் என்ற கூற்றுக்கு சமீபத்திய உதாரணமாக இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.
இப்படத்தின் கதை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்தாலும் கதையின் கருவான காதல் நம் நெல்லையில் தான் உருப்பெருகிறது. அதுவும் இதற்கு முன் எந்த படத்திலும் காட்டப்படாத சட்டக் கல்லூரியில் அக்காதல் அரும்புவது கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது.
மேலும் படத்தில் நம் திருநெல்வேலியின் சுற்றுப்புறங்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பெருமையா.? சிறுமையா.?
காட்சி ரீதியில் திருநெல்வேலியை மிக அற்புதமாகக் காட்டியிருந்தாலும் படத்தின் கதாப்பாத்திரங்களாக வருபர்கள் நம் திருநெல்வேலிக்காரர்களை சரியாக பிரதிபலிக்கிறார்களா என்றால் பெருத்த சந்தேகமே ஏற்படுகிறது. கதை பெரும்பாலும் சாதிய அவமானங்கள் குறித்தே பேசுகிறது. ஈவிறக்கமற்ற அந்த சாதியக் காட்சிகளை பார்க்க்கும் போது நம்ம திருநெல்வேலியில் இந்தளவுக்கு நடக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அது இயக்குனரின் அனுபவத்திற்கு உண்மையாகவே இருந்தாலும் தற்போது பெருமளவு மாறிவிட்ட நெல்லை மக்களின் வாழ்விற்கு அது அன்னியமாகவே தெரிகிறது.
காலம் காலமாக இதே சாதிய முத்திரையோடு ஒதுக்கப்பட்ட பகுதிகளாக இருந்த நம் நெல்லை மண்டலம், தற்போது தான் பிற பகுதி மக்களால் பெருமைமிகு மண்ணாக புகழப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதையும் நம் நெல்லையின் அந்தகால நெகட்டிவ் பக்கங்களைப் பற்றி பேசுவது வேதனையையே அளிக்கிறது. காலங்காலமாக தமிழ் சினிமா நம் திருநெல்வேலியை ரவுடிகளின் பூமியாகவும் கொலைக்களமாவுமே சித்தரித்து வந்துள்ளன. இந்த பரியேறிய பெருமாளும் அதே ட்ராக்கை கையிலெடுத்திருப்பது திருநெல்வேலிக் காரர்களை வேதனைப்படுதுகிறது என்பதே உண்மை.!

Jathi Innum irukatha seikirathu Namma nellai il.....Ithu unamai...Fact Perumal.....
ReplyDelete