144 ஆண்டுகளுக்கு பிறகு நம் தாமிரபரணியில் மகா புஷ்கரவிழா நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணகக்கான மக்கள் நம் நதியில் நீராட வரவுள்ளனர். இந்த நிகழ்வுக்காக தெற்கு ரயில்வேயும் ஏழு சிறப்பு ரயில்களைஅறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விழாவிற்கு எதிராக சிலர் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர்.
தாமிரபரணியின் தூய்மை இந்த விழாவால் கெட்டுவிடும் என்றும் இதற்கு முன் இப்படிபட்ட விழாவே நடந்ததில்லை என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள்.
|
கிருஷ்ணா நதி புஷ்கரம். |
ஆனால் இவர்களின் வாதங்களை திருநெல்வேலி மக்கள் ஒதுக்கித்தள்ளியுள்ளனர். இந்த நிகழ்வை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் நெல்லை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். இயற்கையை கொண்டாடும் இந்த விழாவை நெல்லை மக்கள் வெகு சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தாமிரபரணி நதி கரையோர ஊர்களில் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
|
கோதாவரி புஷ்கரம்.! |
148 தீர்த்தக்கட்டங்களில் விழா ஏற்பாடுகள் துரித கதியில் நடக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக கைப்பிடிகள்,தடுப்பு கம்பிகள், உடை மாற்றும் அறைகள், அன்னதான கூடங்கள் என கரையோரங்கள் களை கட்டி வருகின்றன. விழாவுக்கு எதிர்ப்புகள் பல வடிவங்களில் வந்தாலும் அதை தூர ஒதுக்கிவிட்டு தீர்த்த பெருவிழாவிற்க்கு திருநெல்வேலி மக்கள் தயாராகி வருகிறார்கள். நீங்களும் வாருங்கள் நீராட.! நம்ம நதியை நாம கொண்டாடாம வேற யார் கொண்டாட போறா.?
Comments
Post a Comment