கல்விக் கண் திறந்தவர், ஏழைப் பங்காளர், எளிமையின் திருவுருவம் என்று அழைக்கப்பட்ட காமராஜரின் நினைவு தினம் இன்று.! தமிழக மக்கள் காமராஜரை இன்று மட்டும் நினைக்கவில்லை. அவர் என்று மரித்தாரோ அன்று முதல் இன்று வரை தலைமுறை தலைமுறையாக அவரை தினம் தினம் நாம் நினைக்கிறோம்.
அந்த வகையில் நம் திருநெல்வேலிக்கு காமராஜரின் பெரும் பங்களிப்பாக நாம் கருத வேண்டியது மணிமுத்தாறு பேரணை. தென் தமிழகத்தின் மிகப் பெரிய அணையான அந்த அணையை காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 1958 ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த அணையால் வீணாக கடலில் கலந்து வந்த தாமிரபரணி வெள்ளநீர் வறண்ட நிலங்களை வாழவைத்தது. கரிசல்பட்டி, திசையன்விளை போன்ற வறண்ட பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தாமிரபரணியை கொண்டு சென்றார் காமராஜர்.
மணிமுத்தாறு அணையின் சிறப்புகள்:
• தென் தமிழகத்தின் மிகப் பெரிய அணை இது தான்.
• 5,511 மில்லியன் கன அடி தண்ணீரை இதில் சேமிக்க முடியும்.
• இதன் உயரம் 118 அடி.
• அணையின் நீளம் 3 கி.மீ.
• நெல்லை மாவட்டத்தின் மிகப் பெரிய அணையும் இது தான்.
காமராஜர் கட்டிய இந்த அணைக்கு பிறகு இந்த அளவுக்கான பிரம்மாண்ட அணை நம் மாவட்டத்தில் கட்டப்படவேயில்லை.
அது சரி எல்லோரும் காமராஜராகி விட முடியாதல்லவா.?

Comments
Post a Comment