திருநெல்வேலி என்ற பெயருக்கே தனி கம்பீரமும் கெத்தும் உள்ளபோது, இங்கே இருக்கும் கட்டுமானங்களுக்கு இருக்காதா என்ன. நெல்லையப்பர் கோவில் கோபுரத்தின் கம்பீரம் பற்றி அனைவருக்குமே தெரியும். உயரம் குறைவாக இருந்தாலும் ராஜ கலையில் எழுந்து நிற்கும் அந்த கோபுரத்தின் அழகே தனிதான். அதேப் போல நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், சுலோச்சனார் பாலம் என பல கம்பீரமான கட்டுமானங்கள் நம் நெல்லையில் உள்ளன. அந்த வகையில் நம் திருநெல்வேலியின் தியேட்டர்களும் தனித்துவமான கலை அழகால் நிரம்பியவை. தமிழ்நாடெங்கும் தியேட்டர்கள் படம் பார்க்க மட்டுமே கட்டப்பட்டிருந்த நிலையில் இங்கே நம் நெல்லையில் அவை கட்டிடக்கலை நுணுக்கங்களால் செதுக்கப்பட்டன என்றே சொல்லலாம்.
சென்ட்ரல்:
இருபது வருடங்களுக்கு முன்பு வரை திருநெல்வேலியில் சினிமா என்றால் முதலில் நினைவிற்கு வருவது சென்ட்ரல் தானாம். நெல்லை சந்திப்பிற்கும் டவுணுக்கும் மத்தியில் இந்த திரையரங்கம் அமைந்திருந்ததால் இதை Central என அழைத்தார்களாம். இந்த திரையரங்கம் கட்டப்பட்ட புதிதில் ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றாக திகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மதுரை தங்கம் திரையரங்குக்கு இருந்த மாஸ் இதற்கு இருந்துள்ளது. லிப்ட் வசதி, குழந்தைகளுக்கான தொட்டில் வசதி என பல வசதிகள் இங்கே இருந்துள்ளன. ஒரே நேரத்தில் 2000 பேர் வரை படம் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக இத்தியேட்டர் இயங்கியுள்ளது. இதன் தோற்றம் கப்பல் மாதிரியும், ராஜ அரண்மனை போலவும் தோற்றமளிக்கும், ஆங்காங்கே காங்கிரீட் சிலைகள் என கட்டிடமே காவியமாக கட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெறும் காற்று உலாவும் இடமாக மாறிப்போனது பெருந்துயரம்.!
ரத்னா:
சென்ட்ரல் தியேட்டருக்கு அருகிலேயே இருந்து வணிக சவால் விட்ட திரையரங்கு இது. கிட்டத்தட்ட சென்ட்ரல் தியேட்டரின் பாதி அளவுக்கு இது கட்டப்பட்டுள்ளது. இதுவும் அரண்மனை போன்ற வடிவமைப்பில் தான் அமைந்துள்ளது. இதற்கு சற்று அருகில் இருந்த பார்வதி திரையரங்கமும் தனித்துவமான அமைப்போடு விளங்கியது. அது தற்போது பொது அரங்கமாக மாறிவிட்டது.
லெட்சுமி:
கிட்டத்தட்ட சென்ட்ரல் திரையரங்கிற்கு நிகரான பிரம்மாண்டத்தோடு அமைந்திருந்தது இத்தியேட்டர். நெல்லை டவுண் வயல் வெளி ஓரத்தில் அமைந்திருந்த இத்தியேட்டரில் பல படங்கள் ஓடி வசூல் சாதனை புரிந்துள்ளன. குறுக்குத்துறை ஆற்றில் குளியல் போட்டு விட்டு இதில் சினிமா பார்த்த அனுபவங்கள் அதிகம் பேருக்கு உண்டு. இதுவும் தற்போது மண்டபமாகி விட்டது.
ராம்,முத்துராம்.!
நெல்லை இளைஞர்களின் மனம் கவர்ந்த தியேட்டரான இதுவும் தனி கம்பீரத்தோடு திகழும் கட்டிடம் தான்.! தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஈரடுக்கு திரையரங்கமாக இது திகழ்கிறது. கட்டிடக் கலை அம்சங்கள் அதிகம் இல்லையென்றாலும் திருநெல்வேலியின் சினிமா கெத்தை தக்க வைக்கும் திரையரங்கமாக இது திகழ்கிறது. பெரும் நட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது இங்கு வைக்கப்படும் கட்டவுட்கள் தமிழகம் முழுதும் பேசு பொருளாகும்.!
இவைத் தவிர கணேஷ்,பாம்பே,அருணகிரி போன்றவைகளும் திருநெல்வேலியின் சினிமா தாகத்தை தீர்த்து வைக்கும் அரங்கங்களாக திகழ்கின்றன. அனைத்திலும் கம்பீரத்தோடு திகழும் நம்ம திருநெல்வேலி, திரையரங்குகள் விஷயத்திலும் கம்பீரம் குறையாத ஊராகவே திகழ்வது உண்மையிலலேயே கெத்து தானே.!

Comments
Post a Comment