Skip to main content

உண்மையிலேயே களைகட்டுகிறதா புஷ்கர விழா.?

கங்கை, யமுனைப் போல பனி சிகரங்கள் உருகுவதால் ஓடுவதல்ல நம் தாமிரபரணி. இயற்கையாய் வரும் மேகக்கூட்டங்களை பொதிகை மலை கவர்ந்திழுத்து  மழையாய் பொழிய வைத்து அவை துளித்துளியாய் பெருகி பாய்வது தான் நம் தாமிரபரணி. நம்நாட்டில் பல நதிகள் பாய்ந்தாலும் தெய்வாம்சம் பொருந்திய நதிகள் 12 தான். அதில் நம் தாமிரபரணியும் ஒன்று. விருச்சிக ராசிக்கு உரிய நதியாக நம் நதி விளங்குவதால் 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகா புஷ்கரம் இப்போது இங்கு நடைபெறுகிறது.

ஆரம்பத்தில் அரசியல்:

விழா குறித்து செய்து பரவிய உடனேயே அதனை அரசியல் சூழ்ந்து கொண்டது. பல காரணங்களைக் காட்டி விழாவிற்கு தடை கோரினர் ஒரு தரப்பினர்.  ஆனால் பிரச்னை நீதிமன்ற படியேறி முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக விழாவும் தொடங்கியது. ஆரம்பத்தில் களையிழந்து காணப்பட்ட புஷ்கர விழா பின்னர் சூடுபிடித்தது. புஷ்கரத்தின் தீவிரத்தை நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தான் காண முடிகிறது. தினந்தோறும் பல லட்சம் மக்கள் அங்கு குவிந்து நீராடுகிறார்கள். அதுதவிர அம்பை,கல்லிடை, வீரை, சேரை, கல்லூர்,சுத்தமல்லி,நெல்லை,அருகங்குளம் போன்ற தீர்த்தகட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர்.

மக்கள் திருவிழா:

பல்வேறு அரசியல் காரணங்களால் பிரச்னைக்கு உள்ளான புஷ்கர விழாவை தமிழ்நாட்டு தாமிரபரணி சொந்தங்கள் பெரும் திருவிழாவாக மாற்றியுள்ளனர். மகா புஷ்கரம் மக்கள் திருவிழாவாக மாறியுள்ளதால் நெல்லை மண் எங்கும் ஆன்மிக மணம் வீசுகிறது. இயற்கையை கொண்டாடுகிறது நெல்லை பிராந்தியம்! வாழட்டும் தாமிரபரணி.!
வாழ்வோம் நாமும்.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...