தமிழ் மொழி பிறந்த பூமி, பாரதிக்கு தமிழ் ஊட்டிய மாநகரம், காலங்காலமாக பல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் நடந்து திரிந்த மண் என பல பெருமைகளை கொண்டது நம் நெல்லை மாநகரம். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக திகழும் நம் திருநெல்வேலியில் ஒரு பல்கலைக்கழகம் இல்லையே என்ற குறையை நீக்கும் விதத்தில் உருவாக்கப்படட்டது தான் நம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பகுத்து இப்பல்கலைக்கழகத்தை உருவாக்கினார் கருணாநிதி.
பாரம்பரியமிக்க பல்கலை.!
இப்படி தமிழ்ப் பாரம்பரியம் மிக்க இப்பல்கலைக்கழகத்தில் தான் தமிழில் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களை இது கடுமையாக பாதிக்கவுள்ளது. பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என கூறப்பட்டாலும் தமிழில் தேர்வெழுத சட்ட ரீதியாக உரிமைப் பெற்றுள்ள மாணவர்களை தடை செய்வது எவ்விதத்தில் நியாயம்.?
மங்கும் புகழ்
சமீப காலமாக தலைசிறந்த முன்னெடுப்புகளால் எல்லோரது கவனத்தையும் நம் பல்கலை. ஈர்த்து வந்தது. இந்நிலையில் பல்கலைகழத்தின் உயிர்நாடியாக திகழும் கிரமப்புற மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மாற்றப்படாவிட்டால் தமிழுக்கும் நெல்லையின் மாண்புக்கும் பெரும் இழுக்கு நேரும் என்பதை மேலே இருப்பவர்கள் உணர வேண்டும்.

Comments
Post a Comment