இந்திய பெருநாட்டிற்கு ஆயுதமின்றி விடுதலை வாங்கித்தந்த திரு.காந்தியின் 150 வது பிறந்தநாள் இன்று. "காந்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தவர்,இந்தியாவுக்காக போராடியவர்" என்ற கூற்றுக்குள் அவர் ஒவ்வொரு ஊருக்காகவும் போராடியது உள்ளடங்கியுள்ளது. அப்படி நம் திருநெல்வேலிக்கு அவர் எந்த விதத்தில் பங்களித்தார் என்பது குறித்த தகவல் தமிழின் முன்னணி பத்திரிகையான இந்து தமிழில் வெளியாகியுள்ளது. செ.திவான் என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 முறை காந்தி வந்திருக்கிறார். அதில் 4 முறை அன்றைய நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளாராம். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை வந்த அவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் பாளை. வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தி உரையாற்றியுள்ளாராம்.
அப்போது பேசிய அவர் தாமிரபரணியில் கழிவுகளை கொட்டாதீர்கள் என நெல்லை மக்களை வேண்டியுள்ளார். அதன் மூலம் காலரா நோய்ப் பரவலை தடுக்க முடியும் என்றும் அவர் பேசியுள்ளார். அவர் பேசி 91 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் நாம் தாமிரபரணியை கழிவுகளின் கூடாரமாகவே வைத்திருக்கிறோம் என்பதே மறுக்கமுடியாத உண்மை.!

Comments
Post a Comment