Skip to main content

பாரம்பரியம் குறையாத வடக்குரத வீதி.!

ஒவ்வொரு நகரிலும் புகழ் பெற்ற வணிக நிறுவனங்கள் நிரம்பிய கடை வீதிகள் பல உண்டு. பண்டிகை காலங்களிலும், திருவிழா சமயத்திலும் அங்கு குழுமும் கூட்டம் அந்த வீதிகளையே திருவிழா களங்களாக மாற்றிவிடும். தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் உள்ள ரங்கநாதன் தெரு அத்தகைய சிறப்பு வாய்ந்த பெருவீதி. மதுரையில் விளக்குத்தூண் பகுதியும் பண்டிகைகால பண்டங்கள் வாங்க ஏற்ற இடம். கோவையில் ஒப்பணக்கார வீதி வணிக பெருநிறுவனங்கள் வீற்றிருக்கும் இடமாகும்.  அந்த வரிசையில் நம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலின் வடக்கு ரத வீதி நமக்கு ஏற்ற கடை வீதியாக திகழ்கிறது.

மேற்கண்ட ஊர்களில் உள்ள கடை வீதிகளை விட மிகப் பழமையானது நம் வடக்கு ரத வீதி.  நெல்லையப்பர் கோவில் கட்டியே 2000 வருடங்கள் ஆகும் போது இந்த வீதியின் வயது அதற்கும் முந்தியதாக இருக்கவே வாய்ப்புள்ளது.

மதுரைக்கு தெற்கே வாழும் மக்களுக்கு சீமைத் துணிகளை விற்கும் கடைகள் இங்கு தான் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. முன்னொரு காலத்தில் திருநெல்வேலி என்றால் அது களைகட்டும் நான்கு ரதிகள் தான் என்ற நிலை இருந்தது. நெல்லையப்பர் கோவில் வாசலில் தான் திருநெல்வேலி பஸ் நிலையமும் செயல்பட்டு வந்துள்ளது.

பாரம்பரியமிக்க வீதி:

இந்த வீதி நெல்லை மக்களுக்கு மட்டும் பயன்பட்ட இடம் அல்ல.!  பல உழைப்பாளிகளை மாபெரும் தொழிலதிபர்களாக மாற்றிய ராசியான வீதி. ஆரெம்கேவி கடை முதன்முதலில் கிளை தொடங்கியது இங்கு தான்.! பின்னர் படிப்படியாய் வளர்ந்த அது இன்று அடைந்துள்ள உயரம் மிகவும் பிரமிப்பானது.
அதேப் போல ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்ட போத்தீஸ் தனது இரண்டாவது கிளையை இங்கு தான் அமைத்தது. அதுவும் இன்று தென்னிந்தியாவின் முக்கிய ஜவுளி கடைகளுள் ஒன்று.!

நம் வடக்கு ரத வீதியில் பெரிய பெரிய கடைகள் வியாபித்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முளைக்கும் சிறு சிறு கடைகள் வடக்கு ரதவீதியின் அழகை பெருமளவு கூட்டிவிடும். தீபாவளி என்றால் சிறிய துணி கடைகள்.. பொங்கல் என்றால்  மஞ்சள்,காய்கறி கடைகள், தேரோட்டம் என்றால் விளையாட்டு, ஆபரணக் கடைகள் என காலத்திற்கேற்ப மாறும் கடைவீதி இது.

குறையாத பாரம்பரியம்:

இங்கிருந்த பெரு நிறுவனங்களுள் சில வண்ணார்பேட்டைக்கு தனது கடைகளை மாற்றியிருந்தாலும் தொடங்கிய இடத்தில் சிறிய கடைகளையாவது வைத்து பராமரித்து வருகின்றன. அந்த லிஸ்ட்டில் சமீபத்தில் சோனாவும் இணைந்தது.

என்ன தான் நம்ம திருநெல்வேவவிக்கு வண்ணார்பேட்டை பைபாஸ் ரோடு பஜார் வந்தாலும் கால் நடையாய் நடந்து கடைக் கடையாய் ஏறி இறங்கி வாங்கும் டவுண் துணிமணிகளுக்கும் அதுக்கு பிறகு வாயாற விருந்தளிக்கும் விசாக பவன் முதலிய ஹோட்டல்களுக்கும் உள்ள மவுசே தனிதான்.! பாரம்பரியமிக்க வடக்கு ரதி வீதின்னு சும்மாவா சொல்றாங்க.?❤

Comments

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...