சென்னையில் புரோட்டா விலையை கேட்டு அதிர்ந்த நெல்லையர்கள் சிலர் புரோட்டா கடையை சூரறயாடியது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
கடையையே சூறையாடும் அளவிற்கு புரோட்டா மீது பிரியம் வைத்திருக்கும் நம்ம ஊர்மக்களை என்னவென்று சொல்வது.?
நெல்லைக்கும் புரோட்டாவுக்குமான உறவு அப்படிப்பட்டது.
புரோட்டாவின் பூர்வீகமே நம்மூர் தான்!
இரண்டாம் உலகப் போரின் போது கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் களத்தில் இறக்கிவிடப்பட்ட மைதா மாவு நம் நெல்லை தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில் புரோட்டாவாக அவதாரம் எடுத்ததாம்.
புரோட்டாவின் மகிமை:
கடும் உழைப்புக்கு சொந்தக்காரர்களான நம்மூர் விவசாயிகள் நாள் முழுவதும் வயல் வரப்புகளில் வேலை பார்த்துவிட்டு அகோரப் பசியோடு வீடுதிரும்புவர். அவர்களின் பசியை அடக்கும் மகிமை புரோட்டாவை தவிர எதற்கும் இருக்காது. புரோட்டாவை சுடச்சுட பிய்த்து போட்டு குளிர சால்னா ஊத்தி ஒரு பிடி பிடிக்கும் அனுபவமே தனி தான்.!
அதனாலேயே நம்மூர் உழைப்பாளர்களின் உற்ற தோழனாக புரோட்டா உருமாறியது.
ருசியான சால்னா:
புரோட்டாக்கள் தமிழ்நாடெங்கும் புழக்கத்தில் வந்துவிட்டாலும் அதன் துணையான சால்னா நம்மூரில் தான் டாப்.! தேங்காய் விழுதால் நிரம்பி நல்லெண்ணை மணம் வீசும் சால்னா புரோட்டாவை பதமாக்கி சாப்பிட ஏற்றதாக மாற்றுகிறது. நம்மூர் சால்னாவின் ருசிக்கு தாமிரபரணி தண்ணீர் தான் காரணம் என்றும் கூறுவோர்கள் உண்டு.
புரோட்டாக்கள் பலவிதம்:
தென்தமிழகத்தில் தான் புரோட்டா உருவானது என்றாலும் இங்கே ஒவ்வொரு ஊரிலும் வகை வகையான புரோட்டா தயாராகிறது.
*தூத்துக்குடியில் பொறித்த புரோட்டா
*திருநெல்வேலியில் சாஃப்ட் புரோட்டா
*விருதுநகர் வீச்சு புரோட்டா
என ஊருக்கேற்ற புரோட்டாக்கள் இங்கே உண்டு. ஆனால் சால்னா ஒன்று தான்.!
ரொட்டியால் அடையாளம் பெற்ற இடங்கள்
புரோட்டாவை ரொட்டி என அழைக்கும் வழக்கமும் நம்மிடம் உள்ளது. ரூசியான ரொட்டிக் கடை இருக்கும் இடங்கள் நம்மூரில் முக்கிய லேண்ட் மார்க்-குளாக திகழ்கின்றன.
திருநெல்வேலியை பொறுத்தவரையில் இளங்கோ,வைரமாளிகை,A1, முதலிய கடைகளும் செங்கோட்டையில் பார்டர் கடையும்,வி.கே.புரத்தில் சர்தார் ஸ்டாலும் ருசியான புரோட்டா சால்னாவுக்கு பெயர் போன கடைகள்....
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அத்தனை கடைகளிலும் ஒரு புரோட்டாவின் விலை 5-8 ரூபாய்க்குள் தான்.!
செலவின்றி ருசியை அனுபவிப்பவர்கள் நாங்கள்.! டாட்.!

Comments
Post a Comment