தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. எழில் கொஞ்சும் கோவை மாவட்டத்தில் தேக்கம்பட்டி என்னும் இடத்தில் இந்த ஆண்டுக்கான முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக நெல்லை அறநிலையத்துறை மண்டலத்தில் இருந்து 8 யானைகள் பங்கேற்கின்றன.
கிளம்பினாள் காந்திமதி.!
நம் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஐந்து யானைகள் பங்கேற்கின்றன. இதில் நம் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியும் ஒன்று. காந்திமதியை வழியனுப்பும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்த பிறகு நெல்லை M.D.T பள்ளியில் இருந்து லாரியில் புறப்பட்டாள் காந்திமதி.
48 நாட்களுக்கு காந்திமதியை காண முடியாது.
48 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த முகாமில் யானைகளுக்கு சிறந்த உணவு,உடற்பயிற்சி,உடல்நல சிகிச்சை முதலியவை வழங்கப்பட உள்ளன. எனவே அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியை நாம் பார்க்க முடியாது.

Comments
Post a Comment