Skip to main content

நெல்லையில் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனை.!

நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சட்டக்கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரும் ஜனவரியில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

மூன்றில் ஒன்று நெல்லையில்:

தமிழகத்தில் மூன்று இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. நம் நெல்லையோடு சேர்த்து மதுரை மற்றும் தஞ்சையிலும் இந்த மருத்துவமனைகள் அமைகிறது.

எய்ம்ஸ்-க்கு நிகரான வசதிகள்:

நம் நெல்லையில் அமையவுள்ள பல்நோக்கு மருத்துவமனையை தமிழக அரசின் எய்ம்ஸ் என வர்ணிக்கலாம். கிட்டத்தட்ட எய்ம்ஸ் அளவுக்கான நவீன சிகிச்சை முறைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

நெல்லை மருத்துவமனையின் சிறப்பு:

நம் நெல்லையை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகப் பெரிய மருத்துவமனையாக திகழ்வது மேட்டுதிடல் மருத்துவமனை தான். 1958 ல் காமராஜரால் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1964ல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. இந்தியாவில் அதிக நிலப்பரப்பில் அமைந்துள்ள மருத்துவமனைகளுள் நம் நெல்லை மருத்துவமனையும் ஒன்று.

வரவிருக்கும் வசதிகள்:

நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் அமைந்து வரும் இந்த சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன மருத்துவத் துறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

1.ஏழு மாடியில் மூன்று பகுதிக் கட்டிடங்களுடன் இந்த மருத்துவமனை பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

2. 7 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள் உட்பட 330 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைகிறது.

3.பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கிய 450 மருத்துவ பணியாளர்கள் சேவை செய்ய உள்ளனர்.

4.சிறிதும் பெரிதுமாக 13 துறைகளில் அதிநவீன சிகிச்சை பெறும் வசதிகள் இடம்பெறுகிறது.

5. இதன் மூலம் பல நோய்களுக்கு நாம் சென்னை,மதுரைக்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும்.

விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த மருத்துவமனையால் நம் நெல்லை தென் தமிழகத்தின் மருத்துவ தலைநகரமாக மாறும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனையும் விரைவில் வரவுள்ளதால் தென்தமிழகத்தின் மருத்துவ நகரங்களாக மதுரையும் நெல்லையும் உருவெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.!

Comments

Post a Comment

Popular posts from this blog

நெல்லையில் அமையுமா ஐஐடி , என்ஐடி.?

    தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமை நம் திருநெல்வேலிக்கு உண்டு. நெல்லையின் பாளையங்கோட்டை கல்லூரி,பள்ளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நகரம்.  தென்தமிழகம் இன்று அடைந்திருக்கும் கல்வி வளர்ச்சியில் பாளையங்கோட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் பட்டதாரிகள் இன்று உலகம் முழுதும் செல்வாக்கு மிக்க இடத்தில் அமர்ந்துள்ளனர்.  சில ஆண்டுகள் முன்பு வரை அறவே தொழில் வளர்ச்சி இல்லாத நிலை நெல்லையில் தற்போது மாறிவருகிறது. அருகே தூத்துக்குடி மிதமான தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. நெல்லையிலும் தொழில் துறை அரும்பத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு,மனிதவளம் உள்ளிட்டவையும் நம்மிடம் சிறந்த வகையில் உள்ளது. தேவை ஐஐடி, என்ஐடி:      கல்வி ரீதியில் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பல திருநெல்வேலியில் அமைந்திருந்தாலும் இந்திய அரசின் கல்வி நிறுவனம் நெல்லையில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளூரில் தரம் வாய்ந்த கல்வி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதுவும் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரில் ஒரு இந்திய அரசு கல்வி நிறுவனமும் இல்லாதது

நெல்லையில் ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் கோவில்.!

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பலருக்கு நண்பராக, கடவுளாக விளங்குபவர் விநாயகர். இன்னும் சிங்கிளாக விளங்குவது அவரது தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட விநாயகருக்கு நம் நெல்லையில்  ராஜாகோபுரத்துடன் கூடிய தனிக் கோவில் கம்பீரமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா.? தாமிரபரணி நதிக் கரையோரத்தில் மணிமூர்த்தீஸ்வரம் என்னும் இடத்தில் அழகிய கோவில் ஆனைமுகனுக்கு அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு என்று பிரத்யேகமாக பல கோவில்கள் இருந்தாலும், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையார் கோவில் என்ற பெருமை நம் நெல்லை. மணிமூர்த்தீஸ்வரம் கோவிலுக்கே உண்டு. பிள்ளையார்பட்டியில் கூட துணைக் கடவுளாக மட்டுமே அருள்பாலிக்கும் விநாயகர் நம் நெல்லையில் மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நம்ம ஊரு விநாயகர் கமிட்டெட் ஆன விநாயகராக இங்கு வீற்றிருக்கிறார். ஆம், விக்னேஷ்வரி என்ற பெண் தெய்வத்தோடு  இங்கு அருள்பாளிக்கிறார் நம்மூரு உச்சிஷ்ட்ட விநாயகர். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், விழாக் கோலம் பூண்டுள்ளது இக்கோவில். வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து இக்கோவிலுக்கு சாலை வசதி உண்டு.! விநாயகர் சதுர்த்த

உலக நாகரிகத்தின் தொட்டில்: நெல்லை ஆதிச்சநல்லூர்

நாம் படிக்கின்ற காலத்தில் இந்தியாவின் மிகப்பழமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றே நம் வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே நம் நெல்லை தாமிரபரணி கரையோரத்தில் மிகச் செழிப்பான நாகரிகம் இருந்துள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகம். நம் தாமிரபரணி கரையோரப்பகுதி இப்போது போலவே அந்த காலங்களிலும் மிகச் செழிப்பாக இருந்துள்ளது. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை உயர்ந்த நாகரீகத்தை பின்பற்றி நம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆதியில் தோன்றிய ஆதிச்சநல்லூர்: நம் நெல்லையில் இருந்து பதினெட்டே கி.மீ தொலைவில் தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி இங்கே நடந்து கொண்டிருந்த சமயத்தில் அலெக்ஸாண்டர் என்ற தொல்பொருள் ஆய்வாளர் அகழாய்வை மேற்கொண்டார். அதில் அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.  ஆம், உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு ஒன்று அங்கே இருப்பதைக் கண்டு அசந்துபோனார். சுமார் 110 ஏக்கரில் அது அமைந்திருக்கிறது. இடுகாடே இத்தனை பெரியதாக இருந்தால் அங்கே மிகப் பெரிய நகரம் ஒன்றும் இருந்திருக்கும் என அறிவித்தார் அந்த