கழிவு மேலாண்மைனா.?
நகரங்களில் உருவாகும் கழிவுகளை மக்கும் கழிவுகள்,மக்காத கழிவுகள் என தரம் பிரித்து கையாள்வதே கழிவு மேலாண்மையாகும். இந்த முறையானது இந்தியாவின் பல மாநகரங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் கழிவுகளை பிரித்தாள்வது பல மாநகர நிர்வாகங்களுக்கு கடும் சிக்கலாகவே இருக்கிறது. பல இடங்களில் கழிவுகள் மொத்தமாக பெறப்பட்டு அதன் பின்னரே பிரிக்கப்படுகின்றன.
தனி வழியில் திருநெல்வேலி.!
ஆனால் இங்கே நம் திருநெல்வேலியில் குப்பைகள் சேகரிக்கப்படும் போதே அவை மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகின்றன. இந்த முறையை சோதனை அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து பார்த்தது. அன்பான நம் நெல்லை மக்களின் அமோக ஆதரவால் அம்முறை அமோக வரவேற்பை பெற்றது. அதன் விளைவு கழிவு மேலாண்மையில் நாட்டிலேயே சிறந்த மாநகரமாக இன்று நம் நெல்லை உருவெடுத்துள்ளது.
100% வெற்றி.!
திருநெல்வேலியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் 100% குப்பைகள் பெறப்படும் இடங்களிலேயே பிரித்தாளப்படுகின்றன.
இந்தியாவில் வேறு எந்த மாநகரங்களிலும் சாத்தியப்படாத ஒன்றாக இது இருக்கிறது. நம் நெல்லை மக்களும் துப்புரவு தொழிலாளர்களும் ஒன்றிணைந்து இதை சாதித்துள்ளனர்.
திருநெல்வேலின்னா சும்மாவா.?💪
இன்னும் சாதிப்போம்.!👍
Good
ReplyDelete