பேருந்து இல்லா நிலையம்:
பிரைவேட் பஸ்களின் ஹாரன் ஒலியால் தினமும் அலறும் ஜங்ஷன் பஸ்டாண்டில் தற்போது அமைதி தவழ்கிறது. கேடிசி பேருந்துகள் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் கடந்து செல்கிறார்கள். "டவுண்,மார்க்கட்,ஹைகிரவுண்டே..."என்று நம்மூர் கண்டெக்டர்களின் காட்டு கத்தை கேட்க முடியவில்லை.
ஜங்ஷனை சுற்றும் பேருந்துகள்:
ஜங்ஷன் மூடப்பட்டுள்ளதால் ஜங்ஷனுக்கு வரும் பேருந்துகள் ஜங்ஷனை ஒரு சுற்று சுற்றி வந்து மக்களை இறக்கி விடுகின்றன. மேற்கிலும் கிழக்கிலும் தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அலங்கோலமாய் காட்சியளிக்கிறது.
பேருந்து நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் ஆரம்பித்து விட்டதால் பஸ்டாண்டின் மேற்கூறைகள் அகற்றப்பட்டுள்ளன. பாளை. நகர பேருந்துகள், ரூட் பஸ்கள் வந்து செல்லும் பகுதி புயல் வீசிய பகுதியைப் போல காட்சி தருகிறது. மேற்கூறைகள் இல்லாமல் அந்த பகுதியை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
மைய பகுதியின் நிலை:
பேருந்து நிலையத்தின் மையப்பகுதியிலும் ஆங்காங்கே கடைகளின் கூரைகள் அகற்றப்பட்டுள்ளது. நாம் காலை,மாலை நேரங்களில் டீ,வடை சாப்பிட்ட கடைகள் காலியாகியுள்ளன. மூன்று ரூபாய் வடைக் கடையும் காலிசெய்யப்பட்டுள்ளது.
விடைபெறுகிறது பழைய பேருந்து நிலையம்:
சுமார் 62 ஆண்டுகளாக நெல்லை மக்கள் நடந்து திரிந்த அந்த பகுதி இப்போது மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம் நெல்லை மக்களின் வாழ்வில் பல தருணங்களை அந்த பேருந்துநிலையம் அழகாக்கியுள்ளது.
நம் நெல்லையின் மூன்று தலைமுறைக்கு பயண உற்சாகத்தை ஊட்டிய ஜங்ஷன் (பழைய) பேருந்து நிலையம் நம் நினைவில் என்றென்றும் நிறைந்திருக்கும்.
Comments
Post a Comment