சமையல் எரிவாயு என்றாலே நம் நினைவிற்கு வருவது இண்டேன் அல்லது பாரத் கேஸ் தான். இதில் இண்டேன் நிறுவனத்தை பொறுத்தவரை நம் தென் மாவட்டங்களுக்குத் தேவையான எல்பிஜி சிலிண்டர்கள் மதுரை,திருச்சி முதலிய பகுதிகளில் உள்ள ஆலைகளில் இருந்து நிரப்பபப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் கால விரையமும் வீண் பயணச் செலவும் ஏற்படுகிறது.
நெல்லையில் புதிய ஆலை:
இதனை போக்கும் வகையில் நம் நெல்லையை மையமாக கொண்டு புதிய ஆலையை அமைக்க இந்தியன் ஆயில் முடிவு செய்தது. இதற்காக கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் தேர்வு செய்யப்பட்டு 42 ஏக்கரில் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆலையில் இருந்து பத்து லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட உள்ளன.
விரைவில் செயல்படும்:
இந்த ஆலை அமைவது குறித்து ஏற்கனவே ஒன்றிய அமைச்சர் பொன்.ராதா தகவல் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த ஆலை பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நெல்லை ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் எழாததால் விரைவில் இந்த ஆலை செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment