அதிமுக என்ற கட்சியின் தலைவியாகவும் தமிழக முதல்வராகவும் வீற்றிருந்தவர் ஜெயலலிதா. நடிகையாக தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகி பின்னர் அதிகாரமிக்க அரசியல்வாதியாக உருவெடுத்தவர் அவர்.
சென்னையில் தொடங்கிய அவரது திரை வாழ்க்கை நிறைவடைந்ததும் அங்கு தான்.! ஆனால் அவரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியதும் நிறைவடைந்ததும் நம் திருநெல்வேலியில் தான்.
நெல்லையே முதல் களம்
ஜெயலலிதா அரசியலில் அடியெடுத்த வைத்த பிறகு அவரின் முதல் பொதுக்கூட்டம் அன்றைய நெல்லை மாவட்டம் எட்டயபுரத்தில் தான் நடந்தது. பாரதி பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினார் ஜெயலலிதா.
அதன் பின்னர் அவரை திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர். அதிலும் சுற்றிச் சுழன்ற ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பெறச்செய்தார்.
கடைசி களமும் நெல்லை தான்!
எப்படி தனது அரசியல் வாழ்வை திருநெல்வேலியில் தொடங்கினாரோ அதே போல தனது கடைசி பிரச்சார கூட்டத்தையும் நெல்லையிலேயே முடித்துக்கொண்டார். ஆம் கடந்த 2016 ம் ஆண்டு மே மாதம் நெல்லை பெல் மைதானத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வந்தார். அதற்கு பின்பு அவர் எந்த பிரச்சார மேடையிலும் ஏறவில்லை. அதுவே அவரின் கடைசி மேடையாகிப் போனது.
அவரின் அரசியல் மேடை பேச்சு நெல்லையில் ஆரம்பித்து நெல்லையிலேயே நிறைவடைந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.!
நெல்லை அவரை என்றும் மறவாது.!
(நினைவு நாளில் அவரை நினைக்கிறோம்)

Comments
Post a Comment