ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் நம்ம திருநெல்வேலியில் இதையெல்லாம் செயல்படுத்துவார்களா என்ற சந்தேகம் நம் நெல்லை மக்களிடையே நிலவியது.
ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் தூர எறிந்து விட்டு நெல்லையை ஸ்மார்ட் ஆக மாற்ற கடும் உழைப்பை மேற்கொண்டு வருகிறது நெல்லை மாநகராட்சி...
அடுத்தடுத்து அதிரடி..!
நெல்லையை ஸ்மார்ட் ஆக்க முதலில் குப்பை மேலாண்மையை கையில் எடுத்தது மாநகராட்சி நிர்வாகம். மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு சிறந்த முறையில் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநகரமாக நெல்லை மாறியது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி விருதையும் நம் நெல்லை தட்டிச்சென்றது.
இதற்கிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் நெல்லையில் தொடர்ந்து எடுக்ககப்பட்டு வருகின்றன.
இதுவரை நடந்தது என்ன?
1. நெல்லை மாநகராட்சி அலுவலகப் பூங்கா அழகுற தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
2. அம்ருத் திட்டத்தின் கீழ் பல இடங்களில் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

3. ஜங்ஷன் பேருந்து நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் வெகுவிரைவில் தொடங்க. உள்ளன.
இனி வருவது:
1. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லையில் தொழில்முனைவோர் குழுமம் உருவாகிறது. அதற்கு பிரம்மாண்ட கட்டிடங்களும் எழுப்பப்படுகின்றன. டவுண் பொருட்காட்சி திடலில் அம்மையம் அமைகிறது.
2. இலந்தைகுளத்தில் பொழுதுபோக்கு பூங்கா பிரம்மாண்ட முறையில் அமைந்து வருகிறது.
3. ரெட்டியார்பட்டி மலைப் பிளவில் காட்சி கோபுரம் அமையவுள்ளது
4. புதிய பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்பட உள்ளது.
5. லாரிகளுக்கு தனி முனையம்.
6. நெல்லையப்பர் கோவிலைச் சுற்றிய பகுதிகள் அழகுபடுத்தப்பட உள்ளது.
7. நயினார்குளம் மேம்படுத்தப்படவுள்ளது.
இவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் மாநகர நிர்வாகம் காய்களை நகர்த்தி வருகிறது. நெல்லை பொறுப்பு ஆணையாளர் திரு.நாராயணன் நாயர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நெல்லை ஸ்மார்ட் ஆகும் என்று நினைத்தோம்... ஆனால் இவ்வளவு ஃபாஸ்ட்டாக ஸ்மார்ட் ஆகி வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது.!
Comments
Post a Comment